திருச்சியில் 28ம் தேதி அரசு ஊழியர்கள் விளையாட்டு போட்டிகள்.!

0 6

திருச்சியில் 28ம்தேதி அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி கலெக்டர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருச்சி மாவட்ட பிரிவின் சார்பில் வரும் 28ம் தேதி  அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.இதில் ஆண்களுக்கான தடகளப் போட்டி, ஆண், பெண் இருபாலருக்கும் இறகுபந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, கபடி, மேஜைப்பந்து, டென்னிஸ் மற்றும் கால்பந்து (ஆண்களுக்கு மட்டும்) போன்ற போட்டிகள் நடைபெறவுள்ளது. அனைத்து போட்டிகளும் காலை 8.30 மணிக்கு துவங்கப்படும்.

மாநில அரசின் கீழ் நிரந்தர பணியில் பணிபுரிவோர், பணியில் சேர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் பணிபுரிவோர் மற்றும் அரசு கல்வித்துறை நிறுவனங்கள், உடற்கல்வித்துறையில் பணி புரிவோர் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.  காவல்துறை (டிபிஓ) அலுவலகத்தில் பணிபுரிவோர் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டு. குழு போட்டிகளில் ஒரு துறையிலிருந்து ஒரு அணி மட்டுமே கலந்து கொள்ள இயலும். தனிநபர் போட்டிகளில் ஒரு நபர் ஒரு தடகள பிரிவு போட்டியில் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.