திருச்சியில் இணையத் தமிழ் கருத்தரங்கு !

0 14

ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல்தன்னாட்சி கல்லூரி தமிழாய்வுத் துறை  இணையத் தமிழ் பயிலரங்கை கல்லூரியில் நடத்தியது.

கல்லூரி இயக்குநர் முனைவர் ராமானுஜம் தலைமையுரையாற்றினார்முதல்வர் முனைவர் ராதிகா துணை முதல்வர் முனைவர் பிச்சை மணி, அறிவியல் புல முதன்மையர் முனைவர் ஜோதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் முனைவர் மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இணையத் தமிழ் குறித்து பேசுகையில், மொழி, இனம், பாகுபாடு இன்றி கணிப் பொறியும், இணையமும் பயன்படுத்தப் படுகின்றன.

தமிழ் இலக்கியம், மொழி, மொழியியல் வரலாறு, மொழியின் தன்மை, பண்பாட்டுக் கூறுகள் இன்று இணையத்தில் பல்வேறுப்பட்ட நிலைகளில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இணையத்தின் வளர்ச்சியில் இயந்திர மொழி பெயர்ப்பு, குறுஞ்செயலிகளின் பயன்பாடுகள் மற்றும் உருவாக்கம், மின் நூல் உருவாக்கம், தமிழ் எழுத்துரு மாற்றிகளின் இன்றையப் பங்களிப்பு குறித்து விளக்கினார்.

மேலும் தமிழ் மென்பொருள்களான யாப்புனரி, சந்திப்பிழைத்திருத்தி, ஒளி, ஒலி, எழுத்துணரி, சொற் பிழைத்திருத்தி போன்றவைகளின் பயன்பாடுகளையும், சமூக ஊடகங்கள், வலைப்பதிவுகள் , இணையத் தளங்கள், யூ டியுப், குறுஞ்செயலிகள் உள்ளிட்ட புதிய தொழிற் நுட்பங்கள் குறித்தும் பயிலரங்கில் விளக்கினார். முன்னதாக தமிழாய்வுத் துறை தலைவர் முனைவர் சுந்தரமூர்த்தி வரவேற்க, முனைவர் சண்முகம் நன்றிக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.