ஆன்லைன் வர்த்தகத்தில் ஏமாற்றத்தை தவிர்க்க நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் !

0 17

ஆன்லைன் வர்த்தகத்தில் ஏமாற்றத்தை தவிர்க்க நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு அவசியம் என்று கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார்.

 

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தமிழ்நாடு, பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய இணையதளம் வர்த்தகம் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது.

 

இதில் கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்து பேசியதாவது:

பொதுமக்களிடையே இணையதளம் வர்த்தகம் பெருகி வருகிறது. அப்படி வாங்கும் பொருட்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்தும், நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலமாக வாங்கப்படும் பொருட்களில் சில பார்சல்கள், நேரில் ஒப்படைக்கும் போது சேதமடைந்தும், நுகர்வோர்க்கு திருப்தி அளிக்காத வகையிலும் பெறப்படுகிறது.

அப்பொருட்களை சம்மந்தப்பட்ட வளையதளங்களுக்கு திரும்ப அளித்து நுகர்வோர்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெறுவதற்குரிய நடைமுறைகள் நுகர்வோர்க்கு மனவுளைச்சலும், சலிப்பூட்டும் வகையிலும், காலம் கடத்தும் வகையிலும் உள்ளது. ஆன்லைன் மூலமாக வாங்கப்படும் பொருட்கள் குறிப்பிட்ட தொகைக்கு வாங்கினால் மட்டுமே பார்சல் விநியோக கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்பது போன்ற விபரங்களை நுகர்வோர் கருத்தில்கொள்ள வேண்டும் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

 

ஆன்லைன் வர்த்தகத்தில் விழிப்புணர்வு அதிகமாகும் போது ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறையும். எனவே இணையதள வர்த்தகம் தொடர்பான பங்களிப்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் வேலுமணி, பெட்காட் நிறுவாக செயலாளர் மற்றும் பொருளாளர் செல்வராஜ், பிஷப் கல்லூரி துணை முதல்வர் சாமுவேல் கிறிஸ்டோபர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.