திருச்சியில் ஊடுருவும் சினிமா இயக்குநர்கள் !

0 135

திருச்சியில்  ஊடுருவும் சினிமா இயக்குநர்கள்.

பிரபாகரன்

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாழ்வியல் சார்ந்த திரைப்படங்கள்  அதிகமாக வெளியாகி வருகின்றன. கபாலி, காக்கா முட்டை,பிச்சைக்காரன் என போன்ற படங்கள் சக மனிதர்களின் வாழ்க்கையைப் படமாக்கப்பட்டுள்ளது.  இந்த படங்களை எடுப்பதற்கு முன்னால் ஒரு படத்திற்கு தேவையான, கதைக் கருவை எடு த்துக்கொண்டு, அதற்கு உயிர் கொடுக்கும் கதைக்களத்தை தேடி அலையும் இயக்குநர்கள் இப்போது தமிழ் திரைப்படத்தில் அதிகரித்துவிட்டார்கள்.

எதார்த்த சினிமாவை எடுக்க இந்த இயக்குநர்கள், தங்கள் திரைப்படத்தில் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இயக்குநர்கள்தான் தமிழ் சினிமா உலகில் நிலைக்கிறார்கள்.

பாரதிராஜாவில் இருந்து ப.ரஞ்சித், மணிகண்டன்,வெற்றிமாறன் என அதிகம் பேசப்படும் இயக்குநர்கள் அனைவரும் எதார்த்த சினிமாவை எடுத்தவர்கள்தான்.

சமீபகாலமாக திருச்சியை சுற்றி சினிமா பட்டாளங்கள் வலம் வருகின்றன. திருச்சி ஸூட்டிங் ஸ்பாட், லெகேசன் தேடி என திருச்சி அழகை படமாக்கிட பல இயக்குநர்கள், கதாநாயகர்கள் திருச்சியில் அடிக்கடி முகாமிடுவது வழக்கம்.

மணிகண்டன்

இதுகுறித்து கடந்த நவம்பர் மாத நம்ம திருச்சி இதழில் “சினிமாவிலும் தொற்றிக்கொண்ட திருச்சி சென்டிமென்ட்” எனும் தலைப்பில் திரைப்படத்திலும் தொற்றிக்கொண்ட திருச்சி சென்டிமென்ட் என விரிவாக எழுதியிருந்தோம். அந்த இதழில், திருச்சி என்றால் திருப்புமுனைதான் எனும் சென்டிமென்ட், இப்போது சினிமாவிற்கும் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. நடிகர் தனுசுக்கு திருடா திருடி, நடிகர் சிவகார்த்திகேயேனுக்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா, விஷாலுக்கு மலைக்கோட்டை என ஆரம்பக்காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள் திருச்சியிலேயே எடுத்தார்கள்.

இந்த நடிகர்கள் இப்போது தமிழகத்தில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்நிலையில் இப்போது மீண்டும் திருச்சியில் பல இடங்கள் சங்க 2, அடங்காதே என அடுத்தடுத்த படங்கள் திருச்சி கல்லணை, முக்கெம்பு, கல்லணை சாலை, திருச்சி உழவர் சந்தை மைதானம், சத்திரம் பேருந்து நிலையம் புதியபாலம், மலைக்கோட்டை பகுதியில் எடுக்கப்பட்டு வந்ததை முதல்பக்க கட்டுரையாக வெளியிட்டு இருந்தோம்.

இப்போது திருச்சியை மையமாக வைத்து இன்னொரு விஷயம் சினிமாவில் நடக்கிறது அதையும் பார்ப்போம். சில இயக்குநர்கள் கதை கருவோடு திருச்சிக்குள் உலாவருகின்றார்கள் என்பதுதான் கோலிவுட் வட்டாரத்தின் புதிய பரபரப்பாக உள்ளது.

சுந்தரபாண்டியன்,இதுகதிர்வேலன் காதல் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குரான எஸ்.ஆர்.பிரபாகரன், தனது மூன்றாவது படத்திற்கு முதலில் ‘முடிசூடா மன்னன்’எனப் படத்திற்கு தலைப்பு வைத்திருந்தார்.

இதே தலைப்பினை வேறொரு தயாரிப்பாளர் ஒருவர் உரிமை கொண்டாடியதால், திரைப்படத்தின் பெயரை ‘சத்ரியன்’என பெயர் மாற்றி உள்ளார். நடிகர் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தை நிஜ வாழ்வில் நடக்கும் விஷயங்களை மட்டும்தான் கதையாக எழுத வேண்டும் என நினைக்கிறாராம் எஸ்.ஆர்.பிரபாகரன்.

ஜாகீர்உசேன்

ஒரு வில்லனுக்கும், கதாநாயகனுக்கும் நடக்கும் மோதலை மையமாக வைத்த கதைக்களம்தான் சத்ரியன் திரைப்படம் என்றாலும், திருச்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல தாதாக்கள் சிலரின் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் சத்ரியன்.

இந்தத் திரைப்படம் எடுப்பதற்காக திருச்சியில் தங்கியிருந்து திருச்சியில் உள்ள சில பிரபல ரவுடிகளை சந்தித்து அவர்களுடனேயே சுற்றி திரிந்த எஸ்.ஆர்.பிரபாகரன். நிறைய விஷயங்களுடன் சென்னை திரும்பி இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளாராம்.

எஸ்.ஆர்.பிரபாகரனும் கொஞ்சம் ஆள் ரவுடியை போலவே தோற்றம் இருந்ததால், போலீஸார், ஆள் புதிதாக இருக்கிறார். என சந்தேகத்துடன் கண்காணிக்க ஆரமித்தார்களாம். பிறகு எஸ்.ஆர்.பிரபாகரன். சினிமா இயக்குநர் எனத் தெரிந்ததும் நலம் விசாரித்த போலீஸாரிடம், பொதுவாகவே ஆக்ஷன் படம் எடுத்தால்,மதுரை,திருநெல்வேலியைத்தான் காட்டுவார்கள்.

நான் திருச்சிக்கு வந்திருக்கிறேன். திருச்சியில் நிறையக் கதைகள் இருக்கிறது. இனி தமிழ்சினிமா கொஞ்சக் காலம் திருச்சியைச் சுற்றி சுற்றி வந்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகர்.

இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரை போல காக்கா முட்டை எடுத்த இயக்குநர் மணிகண்டன், அடுத்து விவசாயிகளைப் பற்றிய திரைப்படத்தை எடுத்து வருகிறார் என்பது எல்லோருக்கும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் அவரின் இணை இயக்குநர்கள் குழு, அடுத்த திரைப்படத்துக்கான கதைக் கருவை வைத்துக்கொண்டு திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் நடக்கும் குழந்தை கடத்தல்கள் குறித்து எடுக்கப்படும் அந்தத் திரைப்படத்தின் கதைக்கு வலு சேர்க்க, சமீபகாலமாக திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம், குழந்தையைக் கடத்த அவர்கள் செய்யும் ஜித்து வேலைகள் குறித்தும் தகவல்கள் சேகரித்து வருகின்றார்கள். குறிப்பாக திருவெறும்பூர் பகுதிகளில் கொடிகட்டி பறந்த குழந்தை கடத்தலில் திருட்டு தொழிலுக்கு குழந்தைகளைத் தயார் படுத்தும் விதங்கள் குறித்து சீரியஸாக தகவல் சேகரித்து வருகின்றார்கள். அடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான நல்லப்படத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம் என்கிறார்கள் காக்கா முட்டை மணிகண்டன் குழு.

இப்படிப் பல இயக்குநர்கள் இப்போது திருச்சியில் மையம் கொண்டுள்ளார்கள்.

திருச்சியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பல விஷயங்கள் வெற்றியடைந்துள்ளன. இந்த இயக்குநர்களின் முயற்சியும் வெற்றிபெற நம்ம திருச்சி இதழ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

பிட்ஸ்

சமீபத்தில் இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படம் வெற்றி பெற்று இருப்பதில் இயக்குநர் பார்த்திபன் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார். அடுத்தகட்ட வேளைகளில் தனது டீமுடன் டீஸ்கசனில் இருக்கிறார். கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படக்குழுவில் இருந்தவர்களில் திருச்சி மணிகண்டத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரும் ஒருவர். இவரும் திருச்சியிலிருந்து கதைக் கருவோடு ஒரு நல்ல படம் எடுக்க முயன்று வருகின்றார் என்கிறார்கள் திருச்சி சினிமா ஆர்வலர்கள். 

 

அங்குசம்.காம் இணைய இதழின் அடுத்த பயணமாக நம்ம திருச்சி எனும் இதழாக வெளியாகியுள்ளது.  பல்லாயிரக்கணக்கான வாசகர்கள்,  கொடுத்துவரும் ஆதரவின் அடுத்தகட்ட முயற்சியாக, திருச்சி மாநகரில் உள்ள பல நல்ல மனிதர்களை அடையாளம் காணும் முயற்சியாக இந்த பயணத்தை துவங்குகிறோம்.  வாசகர்களே, எங்கள் பலம். அந்த நம்பிக்கையில்  களமிறங்கியுள்ளோம்.

இ.பேப்பரை படிக்க இங்கே கிளிக் செய்யவும் .

நம்ம திருச்சி இதழ்கள்

Leave A Reply

Your email address will not be published.