நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிராக 60 சதவீத வழக்குகள் உள்ளது. ஐகோர்ட் நீதிபதி மகாதேவன்

0 25

நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிராக 60 சதவீத வழக்குகள் உள்ளதாக ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் பேசினார்.

திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் 33வது கல்லூரி தின விழா நடந்தது. கல்லூரியின் ஆட்சி மன்ற குழு செயலாளர் ராமநாதன் வரவேற்றார். தலைவர் முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

பொருளாளர் கோபிநாதன் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை ஐகோர்ட் நீதிபதி மகாதேவன்  பேசும் போது..

கல்வி, அறிவு தான் நாட்டின் செல்வங்கள். நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது. கலாசாரம், மொழி ஆகியவை மீதும் அறிவியல் தொழில்நுட்பத்தின் பார்வை பட வேண்டும்.

2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இலக்கியத்தில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. சங்க காலங்களில் இருந்து பெண்களை சார்ந்தே தமிழக வரலாறு உள்ளது. இப்போது நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பாலியல் தொல்லை, வரதட்சணை கொடுமை ஆகியவை தொடர்பாக 60 சதவீத வழக்குகள் உள்ளன. இதே நிலை நீடித்தால் பெண்களின் வளர்ச்சி பாதிக்கும். இதை உணர்ந்து சமுதாயம் செயல்பட வேண்டும்.

காவேரி கல்லூரி முதல்வர் சுஜாதா ஆண்டறிக்கை வாசித்தார்.

புரவலர்கள் கந்தசாமி, சுந்தரராஜூலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.