திருச்சியின் அந்த அ.தி.மு.க. மூன்று எம்.எல்.ஏக்களுக்கும் என்னாச்சு…..

0 4

திருச்சி மாவட்டத்தில் உள்ள, மூன்று, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் கட்சித் தலைமை மீது, கடும் அதிருப்தியில் உள்ளனர். அமைச்சர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டத்திலுள்ள, ஒன்பது தொகுதிகளில், 5 தொகுதியை அ.தி.மு.க.,வும், மீதியுள்ள, நான்கு தொகுதிகளை, தி.மு.க.,வும் கைப்பற்றியது. இதில், திருச்சி கிழக்கு – வெல்லமண்டி நடராஜனும், ஸ்ரீரங்கம் – வளர்மதியும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தனி ஆவர்த்தணம் செய்து கொண்டு வருகிறார்கள்.

மணப்பாறை – சந்திரசேகர், இவர் வாக்கெடுப்பு நடந்த போதே தலைமறைவாகி கண்டுபிடிக்கப்பட்டவர். மண்ணச்சநல்லுார் – பரமேஸ்வரி, எப்படியும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். முசிறி – செல்வராஜ் ஆகிய எம்.எல்.ஏ.,க்கள், சசிகலா அணியில் உள்ளனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த எதையும், தினகரன் தரப்பு செய்து தரவில்லை என்று தெரிகிறது. இதனால் இந்த மூன்று, எம்.எல்.ஏ.,க்களும், திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் அமைச்சர்களின் நிகழ்ச்சியில் கூட பங்கேற்காமல், புறக்கணித்து வருகின்றனர்.

 

இதற்கு முன்பு எல்லாம் இப்படி கிடையாது எந்த நிழ்ச்சி நடந்தாலும் மறக்காமல் ஆஜர் ஆகிவிடுவார்கள்.  ஆனால் இப்போது கட்சி நிகழ்ச்சி என்றோலே மிகவும் அசட்டையாகவே இருக்கிறார்கள்….

 

கடந்த, 13ல் துவங்கி, 19 வரை நடந்த, நான்கு அரசு விழாக்களில், மூன்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்கவில்லை. இதனால், மூவரும் விரைவில், ஓ.பி.எஸ்., அணியில் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏற்கனவே, கோவை சூலுார் தொகுதி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கனகராஜ் வெளிப்படையாக முதல்வர் பழனிசாமிக்கு எதிராக பேசியுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் மூன்று, எம்.எல்.ஏ.,க்களும் மவுன யுத்தம் நடத்தி வருவது, அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலாளர் தினகரனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.