திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில் என்ன தான் பிரச்சனைங்க !…

0 13

திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்க சர்ச்சை .

திருச்சி நீதிமன்றத்தில் கடந்த வாரத்தில் பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தில் பேச்சு வார்த்தைக்கு என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டம் கைகலப்பு வரை சென்றது தான் இப்போது பலருக்கு பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தை பற்றின அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது…

பெண் வழக்கறிஞர் சங்கம் பற்றின ஒரு பார்வை….

திருச்சிராப்பள்ளியில் பெண் வழக்கறிஞர்கள் சங்கம்(பதிவு எண்50/2000) ஏற்படுத்தப்பட்டு  ராஜேஸ்வரி, ஜெயந்தி ராணி, செல்லம் தமிழரசன், நிர்மலா உள்ளிட்டோர் தலைவர் பொறுப்பை வகித்தனர்.

நிர்மலா தலைமை ஏற்கும் போது வாக்களித்து தேர்வு செய்யப்பட்டார்.

தலைமை தேர்வானது ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டவர்களே பொறுப்பு வகித்தார்கள்.

இந்நிலையில் 2015 ஆண்டு தலைமை வகித்த ஜெயந்தி ராணிக்கு பெண் வழக்கறிஞர்கள் 30 நபர்கள் ஒன்று சேர்ந்து பல மாதமாக நடத்தப்படாத செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினர்.

மேலும் செயலராக பொறுப்பு வகித்த விஜயமணி , பொருளராக பொறுப்பு வகித்த லெஷ்மி உள்ளிட்டோர் அரசு பணிக்கு சென்று இரண்டு ஆண்டுகள் சென்றும் பிறரை பொறுப்பில் நியமிக்க வில்லை. சங்க ஆவணங்கள், உறுப்பினர் சந்தா, சங்கத்தினை புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை சமர்பிக்க உறுப்பினர்கள் கேட்டனர்.

செயலர் மற்றும் பொருளாளர் இல்லாத நிலையில் முன்னாள் தலைவர் ராஜேஸ்வரியை பொறுப்பாளராக நியமித்து பெண் வழக்கறிஞர்கள் தலைவர் ஜெயந்தி ராணி துணைத் தலைவர் ராஜலெட்சுமி உள்ளிட்டோர்க்கு ஆவணங்களை ஒப்படைக்கக் கோரி பதிவு தபால் அனுப்பினர்.

எவ்வித பதிலும் வராத நிலையில் 1-4 -16 தேதியன்று விஜயாபாபு தலைவராகவும், சித்ரா துணைத் தலைவராகவும், ஸ்ரீதேவி செயலராகவும், சுதா, கனிமொழி உள்ளிட்டோர் துணைச் செயலராகவும் , இமயவள்ளி பொருளராகவும் தற்காலிகமாக நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்தனர்.

அலுவலக உதவிக்கு 12 வழக்கறிஞர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

2016 ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்த கமலாக கஸ்தூரி தேர்தல் அலுவலராக நியமித்தனர்.

2016 – 2018 சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் 28 – 4 – 16 நடத்தப்பட்டு பத்மாராமநாதன் தலைவராகவும் , சித்ரா துணைத் தலைவராகவும் , சாந்தி செயலராகவும், ஸ்ரீதேவி துணைச் செயலராகவும் , மெஹராஜ் பொருளராகவும், சுதா துணை பொருளராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

4-2-17 அன்று முன்னாள் நீதியரசர்  அருணா ஜெகதீசனை சிறப்பு விருந்தினராக வெள்ளிவிழா நிகழ்வினை நடத்தினர்.

இந்நிலையில் 21- 3 -17 அன்று பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக செல்லம்தமிழரசனும் செயலராக ஜெயந்திராணியும், பொருளராக ராஜலெட்சுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

என்ன நடக்கிறது திருச்சி பெண் வழக்கறிஞர் சங்கத்தில் என்கிற குழப்பம் பெண் வழக்கறிஞர் சங்கத்தில் மட்டும் அல்ல திருச்சி நீதிமன்றம் முழுவதும் எதிரொலிக்கிறது….

 

Leave A Reply

Your email address will not be published.