திருச்சி காந்தி மார்கெட்டில் காய்கறி விலை கிடுகிடு ….

0 54

திருச்சி காந்தி மார்கெட்டில் காய்கறி விலை கிடுகிடு ….

 

உற்பத்தியும் குறைந்து, வரத்தும் குறைந்ததால் திருச்சியில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.50க்கு விற்ற பீன்ஸ் ரூ.100 என விலை உயர்ந்து உள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு திருச்சி மட்டுமல்லாமல் வெளிமாவட்டங்களில் இருந்து தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்காக இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். மார்க்கெட்டில் இருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி விற்பனை செய்வது வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் காய்கறிகள் உற்பத்தி அப்படியே குறைந்து விட்டது.

இதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வரக்கூடிய வரத்தும் வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக காய் கறிகள் விலை ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் மாறி மாறி கண்ணாமூச்சி காட்டி வருகிறது.  திருச்சியில் சில்லரை கடைகளில்

கிலோ ரூ.60க்கு விற்ற கத்தரிக்காய் தற்போது ரூ.80க்கு விற்பனை ஆகிறது. ரூ.12க்கு விற்ற முட்டைக்கோஸ் தற்போது ரூ.28 ஆகி விட்டது.

ரூ.28க்கு விற்ற கேரட் விலை ரூ.45 ஆக உயர்ந்து உள்ளது.

ரூ.50க்கு விற்ற பீன்ஸ் ரூ.100க்கு கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

அதேநேரத்தில் தக்காளி ரூ.24ல் இருந்து 20 ஆக குறைந்து உள்ளது.

அதேநேரத்தில் பெரிய வெங்காயம் (ரூ.25), சின்ன வெங்காயம்(ரூ.55), பச்சை மிளகாய் (ரூ.30), இஞ்சி(ரூ.60), முருங்கை(ரூ.40), தேங்காய்(ரூ.15) விலையில் எந்த மாற்ற மும் இன்றி அதே விலைக்கே விற்பனை ஆகின்றன.

இதனால் சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.