திருச்சியில் மகளிர் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் மே 2 முதல் கோடைகால சிறப்பு பயிற்சி

0 73

திருச்சியில் மகளிர் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் மே 2 முதல் கோடைகால சிறப்பு பயிற்சி

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் பெண்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகளை அளித்து, தொழில் முனைவோர்களாக்கி வருகிறது. அதன் அடிப்படையில் மே 2ம் தேதி கோடைகால பயிற்சி துவங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

சமுதாயத்தின் அடிமட்டத்தில் பல்வேறு திறமைகளையும், ஆளுமை பண்புகளையும் உள்ளடக்கிய பல பெண்கள் முன்னேற , அவர்களுக்காக உதவிக்கரம் நீட்டி எவ்வித பாகுபாடின்றி அனைவரது முன்னேற்றத்திற்கும் பெரிதும் பாடுபட்டு அவர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் தகுந்த ஆலோசனைகளையும் , ஆதரவையும் பெண்  தொழில் முனைவோர்களுக்கு  அளித்து வருகிறது.

தொழில்முனைவில் ஒருங்கிணைந்த உத்தியை கையாண்டு பரந்த  தொழில்முனைவு  தளத்தை உருவாக்குதே WEAT-ன் (தமிழ்நாடு  மகளிர் தொழில் முனைவோர் சங்கம்)  முதன்மை நோக்கமாகும் .

சுய தொழில் புரிய விருப்பமுள்ள பெண்களுக்கு  சிறு , குறு தொழில்கள் தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்து அவர்களின்  வாழ்வாதாரத்தை  மேம்படுத்துதல்.

பெண்களை  பொருளாதார நிலையில் மேம்படச் செய்வது .

இதன் ஒரு பகுதியாக 2017 ம் ஆண்டுக்கான கோடைகால பயிற்சி முகாமில்…..

சானிட்டரி நாப்கின்,

சிறுதானியங்கள் மூலம் மதிப்புகூட்டு பொருள்கள்,

பாக்குமட்டை தட்டு,

சோப்புத்தூள்,

பினாயில்,

சணல் பை,

நான் ஓவன்பை,

பேப்பர் பை,

சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரித்தல்,

ஆட்டோ டிரைவிங்,

கார் டிரைவிங்,

மெஷின் எம்பிராய்டரி,

ஸ்போக்கன் இங்கிலீஷ்

உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வரும் மே 2ம் தேதி முதல் நடக்கும் கோடைகால பயிற்சி முகாமில் பெண்களுக்கு கற்றுத்தரப்பட உள்ளது.

இப்பயிற்சி பெற ஆர்வம் உள்ளவர்கள்

தமிழ்நாடு  மகளிர் தொழில் முனைவோர் சங்கம் (WEAT),

No: 135 – B , St,Paul Complex,
Bharathiyar Road,
Trichy- 620 001.
mobile   : தொலைபேசி எண்: 0431-4200040, 9488785806.

Email Id : [email protected] – முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 

Leave A Reply

Your email address will not be published.