குடிநீர் கேட்டு அரசு பஸ்களை சிறைபிடித்த மணப்பாறை மக்கள்.

0 20

குடிநீர் கேட்டு அரசு பஸ்களை சிறைபிடித்த மணப்பாறை மக்கள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அருகே வி.இடையபட்டி ஊராட்சிக்குட்பட்ட வடதாளிப்பட்டி பகுதியில் கடந்த 2 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. அங்குள்ள குடிநீர் தொட்டிகளிலும் தண்ணீர் ஏற்றுவது கிடையாது. மேலும், ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் இப்பகுதி மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பல கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள்  காலிக்குடங்களுடன் கோவில்பட்டியில் இருந்து தாதகவுண்டம்பட்டி வழியாக மணப்பாறை செல்லும் சாலையில் இடையபட்டி அருகே அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்களை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பெருமாள் என்ற பி.ஆர்.அருணாச்சலம் மற்றும் வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பஸ்களை விடுவித்து கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.