திருச்சி வழக்கறிஞர்கள் மோதல் – 4 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு

0 7

திருச்சி வழக்கறிஞர்கள் மோதல்  – 

4 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு

திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நலன் காப்பதற்காக தி திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கம், சிட்டி அட்வகேட் அசோசியேன் செயல்பட்டு வருகிறது.

தற்போது வழக்கறிஞர்களிடையே ஏற்படும் பிரச்சனையால் காவல்துறையில் வழக்கறிஞர்கள் மீது புகார் அளித்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

பெண் வழக்கறிஞர் ஒருவரைப் பற்றி அவதூறான கடிதம் வர பெண் வழக்கறிஞர்கள் சங்கம் காவல்துறையில் புகார் அளித்தது.

இப்பிரச்சனை விசாரனையில் உள்ள நிலையில் ,

குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்  ராஜேந்திரகுமார், செயலர் ராஜராஜ சோழன் மீது பெண் வழக்கறிஞர் செல்வராணி திருச்சி செசன்சு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

புகார் மனுவில், திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் பணியில் இருந்த போது குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேந்திரகுமார், செயலர் ராஜராஜ சோழன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். மேலும் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர் என புகார் அளிக்க வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

இது போல ராஜேந்திரகுமார் அளித்த புகாரின் பேரில் மீது பெண் வழக்கறிஞர் செல்வராணி, பழனியப்பன் மீதும்,

பழனியப்பன் கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திரகுமார், ராஜராஜ சோழன் ஆகியோர் மீதும் காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வழக்கறிஞர் சங்க தேர்தல் வருகின்ற இந்த நேரத்தில் அடுத்தடுத்த பிரச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் வழக்கறிஞர்கள் சிக்கிக்கொள்வது வேதனையாக இருக்கிறது – இந்த  பிரச்சனையை பெரிய பிரச்சனையா ஆக்காம பேசி தீர்வு செய்யுங்கள். இல்லை என்றால் நமக்குள் சண்டை போட்டுக்கொள்வது – வேறு யாருக்கோ கொண்டாட்டம் ஆகிவிடும் என்று சீனியார் வழக்கறிஞர்கள் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.