யார் கையில் சிக்கினார் ரஜினி ! தெரியாமல் தடுமாறும் ரசிகர்கள்.

0 38

1996–ல் அரசியல் சர்ச்சைகளுக்கு

பிறகு ரசிகர்களை சந்திப்பதை நிறுத்தினார் ரஜினி. தங்களை சந்திக்கும்படி தொடர்ந்து ரசிகர்கள் கடிதங்கள் அனுப்பி வற்புறுத்தியதால் 2008–ல் கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்துக்கு ரசிகர்களை வரவழைத்து பேசினார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

அதன் பிறகு 2011–ல் தனது பிறந்த நாளையொட்டி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். அப்போது ரசிகர்களிடம் சிகரெட் பழக்கத்தை கைவிட்டு விடுமாறு கேட்டுக் கொண்டார்.

2011 ஜீலை மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் சரியானதை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருப்பூரில் உள்ள சாமுண்டிபுரம் ரஜினிகாந்த் திருமண மஹாலில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியபோது.

” ரஜினி ரசிகர்களின் பொது நல சேவைகள் தொடர வேண்டும். அவர்கள் ரஜினியின் புகழ் பாடுவதை விட அவர் பெயரில் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ரஜினிகாந்த் விரைவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் வந்து மாநாடு நடத்தி ரசிகர்களையும், பொது மக்களையும் நேரில் சந்தித்து பேசுவார் என்றார்.

அதன் பிறகு கோச்சடையான் படம் ரிலீசையொட்டி ரசிகர்களை அவர் பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சந்திக்கவில்லை.

2014 டிசம்பர் 12–ந்தேதி தனது பிறந்த நாளில் ரசிகர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லிங்கா’ படமும் அப்போது ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளியான நிலையில் ரஜினிக்கு ஒரு வெற்றிபடம் மிக அவசியமானதாக இருந்து. அப்போது தான் சங்கரின் எந்திரன் 02 படம் தயார் ஆனாது. இது மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதால் அதை விற்பனை செய்வதற்கு ஒரு சிறிய வெற்றிப்படம் தேவைப்பட்டது.

இதனால் தன்னுடைய வழக்கமான ஆட்களை எல்லாம் தள்ளிவைத்து விட்டு தன் மகளின் சொல்படி கபாலி பட வேலையில் இறங்கினார். பா.ரஞ்சித் டீம் முழுக்க ரஜினி ரசிகர்களால் நிறைந்தது என்றால் கபாலி படத்திற்கு எந்த அரசியல் புரோமோஷன் வேலையும் செய்யாமல் தயாரிப்பாளர் தாணு தன்னுடைய சினிமாவுக்கு தேவையான அத்தனை யுத்திகளையும் பயன்படுத்தி படத்தை வெற்றிப்படமாக்கினார்.

2.ஓ  – 2017 ( தமிழ் )

கபாலி  – 2016 ( தமிழ் )

லிங்கா  – 2014 ( தமிழ் )

கோச்சடையான்  – 2013 ( தமிழ் )

எந்திரன்  – 2010 ( தமிழ் )

குசேலன்  – 2008 ( தமிழ் )

சிவாஜி : தி பாஸ்  – 2007 ( தமிழ் )

சந்திரமுகி  – 2005 ( தமிழ் )

ராஜா சின்ன ரோஜா  – 1989 ( தமிழ் )

காலங்காலமாக ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.  ஆனால் ரஜினியோ ரசிகர்களின் வெறித்தனமாக கோஷத்தை தன்னுடைய பட விற்பனைக்கு மட்டுமே இதுவரைக்கு பயன்படுத்தி வந்தார்.

ரஜினி தனக்கு நெருக்கமானவர்களிடம் கலைஞர் அண்ணன் மறைவுக்கு பிறகு தான் அரசியல் பற்றி முடிவெடுக்க முடியும் என்று சொல்லி வந்தாராம். இப்போது கலைஞர் தற்போது நினைவாற்றல் இன்றி உடல் சரியில்லாமல் இருக்கிறார்.

ரஜினி தன்னுடைய சக நடிகர் கமலில் அதிரடியான அரசியல் பேட்டி ரஜினியை உசுப்பிவிட்டது என்றும் இப்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் ஒருபுறம் பாரதீய ஜனதாவில் ரஜினியை இணைத்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அக்கட்சியினர் முயற்சித்து வருகிறார்கள்.

சங்கரின் ஓ.2 படத்தை இலங்கை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் புரோமோஷனுக்கா தான் இலங்கைக்கு செல்லவிருந்த நேரத்தில் திருமா, வைகோ, வேல்முருகன் ஆகியோரின் எதிர்ப்புக்கு பிறகு இலங்கை பயணத்தை நிறுத்தினார். ஆனால் அந்த தலைவர்களின் எதிர்ப்புக்கு எதிர் அறிக்கை கொடுத்து அந்த தலைவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

இலங்கையில் மட்டும் அல்ல மலேசியாவிலும் தனக்கு செல்வாக்கு இருக்கு என்பதை நிறுபீக்கவே சமீபத்தில் மலேசிய தலைவர் ரஜினி வீட்டிற்கே வந்ததும் – அடுத்து பிரதமர் மோடியை சந்தித்ததும். கபாலி படம் மலேசிய சூட்டிங்க நடக்க அனுமதி கடித்தை 15 நிமிடங்களில் வாங்கியது போன்று இதுவரை எந்த சினிமாவுக்கு இவ்வளவு விரைவாக நடந்தது கிடையாது என்று ரஜினியின் அதிகாரத்தை சொல்லி மெச்சுகிறார்கள்.

.

ஆனால் இந்த மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு பொதுமக்களிடையேயும், ஊடகத்திலும் எந்த பரபரப்பை ஏற்படுத்தால் இருப்பதால் தான் இந்த ரசிகர் சந்திப்பு என்கிறார்கள்.

லைகா நிறுவன நிர்வாகி ராஜு மகாலிங்கம் விடுத்துள்ள செய்தியில், “இந்திய சினிமா என்னவென்று உலகுக்குக் காட்டும் நேரம் நெருங்கி விட்டது. இன்னும் ஒரு மாதம்தான். சூப்பர் ஸ்டாரும் கிலாடியும் இந்திய சினிமா என்னவென்று உலகுக்குக் காட்டுவார்கள்… கவுன்ட் டவுன் ஆரம்பித்துவிட்டது,”

கோடம்பாக்கத்திலுள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி காலை முதல் ரஜினி தன் ரசிகர்களை சந்திப்பதாக தகவல் வெளியானது. இதனால் மண்டபத்தில் ஏராளமான ரசிகர்கள் ,நிர்வாகிகள் என்று ஒரு பெரும் கூட்டம் கூடியது.ஆனால் மாலை வரை ரஜினி மண்டபத்திற்கு வரவில்லை.ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியான சத்தியநாராயணா மட்டும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சென்னையிலேயே இருந்த ரஜினி அவ்வப்போது சத்தியநாராயணவுடன் செல்போனில் பேசி ரசிகர்களின் கருத்துகளை கேட்டுக் கொண்டார். ரஜினி சமீபகாலமாக பா.ஜ.க.வின் பக்கம் சாயப் போவதாக வரும் தகவல்கள் குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் சத்தியநாராயணவை துளைத்து எடுத்துள்ளனர். ‘தலைவர் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போகிறாரா ? அல்லது தாமரைக் கட்சியில் சேரப் போகிறாரா ? இல்லையென்றால் வழக்கமான வாடிக்கையான சந்திப்புதானா ? என்று தெளிவு படுத்துங்கள் ‘ என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சத்திய நாராயணா பதில் அளிக்கவில்லை. ஏப்ரல் 12,17 ஆகிய தேதிகளில் தலைவர் உங்களை சந்திக்கும் போது இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுவார் என நழுவியிருக்கிறார் சத்தியநாராயணா.

ஆனால் ரஜனியிடம் இருந்தோ ரஜினி 6 நாட்கள் தினமும் 1,500 ரசிகர்களை சந்திக்கிறார். 10 ஆயிரம் ரசி0கர்களை அவர் சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.

இப்போது இருக்கும் அரசியல் வெற்றிடம், தன்னுடை ஓ.2 படத்தை விற்கவேண்டி நெருக்கடி இவை எல்லாம் ரஜினி விற்பனை செய்வதற்கு கார்பரேட் கொடுத்த ஐடியாவும் அதற்கு ஏற்றபடி ஆடும் ரஜினியும் எதையும் அறியாத இந்த ரசிகர்களை என்னவென்று சொல்வது…

Leave A Reply

Your email address will not be published.