இந்திய அளவில் சிறந்த கல்லூரி பட்டியலில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நான்காம் இடம் !

0 47

2017 ஆம் ஆண்டின் மத்திய மனித வள மேம்பாடுத் துறையின் மிகச் சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் (National Institutional Ranking Framework) திருச்சி பிசப் ஹீபர் கல்லூரி இந்திய அளவில் நான்காவது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

சிறந்த கல்விச் சேவை, தரமான உட்கட்டமைப்பு என பல்லாண்டு காலமாக ஹீபர் இந்திய அளவில் மிளிர்கிறது

தொடர்ந்து கல்லூரியினை சர்வதேச அளவில் வழி நடத்திச் செல்லும் எமது கல்லூரி முதல்வருக்கு மேனாள் மாணவர்கள் சார்பின் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கல்லூரியின் வளர்ச்சிக்கு அயராது உழைக்கும் ஆசிரியப் பெருமக்கள், மாணவ கண்மணிகள் மற்றும் கல்லூரியின் ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஒரு வருடத்தில் கல்லூரியில் பயிலும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 92 சதவிகித மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட, பழங்குடி சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆவர்.

இட ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களால் கல்லூரியின் தரம் குறைந்து விடும் என்ற பரவலான விசமப் பிரச்சாரத்திற்கிடையில்  பிசப்கல்லூரி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி கற்க வாய்ப்பளித்து இன்றைக்கு இந்தியாவிலேயே நான்காவது இடத்தில் தர வரிசையினை பெற்று சாதித்துக் காட்டியுள்ளது

சமூக நீதிக்கான கல்விப் பணியில் பிசப் ஹீபரின் சேவை தொடர வேண்டும்.

வாழ்த்துகள்!

 

பட்டியல்

இந்திய அளவில் முதல் 100 இடங்களுக்குள் இருக்கும் கல்லூரிகளின் தர வரிசை.
மத்திய மனிதவளத்துறை வெளியிட்டிருக்கும் நாட்டின் சிறந்த கல்லூரிகள் பட்டியலில் முதல் 100 கல்லூரிகளின் பட்டியலில் 37 கல்லூரிகள் தமிழகத்தை சேர்ந்தவை.
சென்னை லயோலா (2)
திருச்சி பிஷப் ஹீபர் (4),
சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி (10)
கோவை பி.எஸ்.ஜி கல்லூரி (11)
மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி (12)
விருதுநகர் ஐயாநாடார் ஜானகியம்மாள் (13)
கோவை PSGR (14)
சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி (16)
கோவை கொங்குநாடு கலை & அறிவியல் (19)
கோவை கிருஷ்ணா கலை & அறிவியல் (22)
திருச்சி ஹோலி கிராஸ் (26)
மதுரை ஃபாத்திமா கல்லூரி (27)
விருதுநகர் VVV கல்லூரி (38)
விருதுநகர் இந்துநாடார் கல்லூரி (39)
AVC கல்லூரி (43)
கோவை NGP (44)
சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் சையத் (47)
திருச்செங்கோடு KS ரங்கசாமி (50)
கன்னியாகுமரி ஹோலி கிராஸ் (54)
விருதுநகர் சாய்வா பானு (56)
கோபி கலை அறிவியல் கல்லூரி (57)
சென்னை சங்கர்லால் ஜெயின் கல்லூரி (59)
சென்னை மீனாட்சி கல்லூரி (59)
காஞ்சிபுரம் வைஷ்ணவா கல்லூரி (62)
ஈரோடு கொங்கு கலை அறிவியல் (63)
கோவை நிர்மலா கல்லூரி (65)
கோவை ரத்தினம் கல்லூரி (66)
நாமக்கல் மகேந்திரா கலை அறிவியல் (67)
கோவை ராமகிருஷ்ணா கல்லூரி (68)
கோவை SNR Sons (69)
கோவை ஹிந்துஸ்தான் (75)
நாமக்கல் KSR (76)
சென்னை SRM (82)
நாமக்கல் முத்தாயம்மாள் (86)
திருப்பத்தூர் தூய திருஇருதய கல்லூரி (95)
திருச்சி நேஷ்னல் கல்லூரி (97)
பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் (100)

 

Leave A Reply

Your email address will not be published.