திருச்சி சிவா எம்.பி மகன் காதல் கலாட்டா சர்ச்சை !

0 35

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மனைவி, மாமியாரை செல்போனில் மர்மநபர்கள் மிரட்டுவதாக திருச்சி சிவா எம்.பி.யின் மகன் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

திருச்சி சிவா எம்.பி.யின் (தி.மு.க.) மகன் சூர்யா சிவா.  தனது காதல் மனைவி அதீனா பிரதீஷா, மாமியார் பிரேமம் குமாரி மார்ஷல் ஆகியோருடன் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது சூர்யா சிவா கூறியதாவது:-

நான் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் எனது மனைவியை காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டேன். எனது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். திருமணத்திற்கு எனது தந்தை (சிவா எம்.பி.) எதிர்ப்பு தெரிவித்தார். எனது மனைவியுடன் நான் திருச்சி வாசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறேன். காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளும்படி பல முறை வலியுறுத்தியும் எனது தந்தை ஏற்கவில்லை.

இதனால் அவருடன் எனக்கு சுமூகமான உறவு கிடையாது. எனது காதல் திருமணத்தை உறவினர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். எனது தந்தையும் காதல் திருமணம் செய்தவர் தான். எனது சகோதரியும் காதலித்து திருமணம் செய்தவர் தான். காதல் திருமணம் செய்தவரும், சகோதரியின் திருமணத்தை ஏற்றவரும், எனது திருமணத்தை மட்டும் அவர் ஏற்க மறுத்து வருகிறார்.

செல்போனில் மிரட்டல்

இந்நிலையில் எனது மனைவி, மாமியாரின் செல்போன் எண்களை மர்மநபர்கள் தொடர்பு கொண்டு 2 பேரையும் மிரட்டுகின்றனர். என்னை விட்டு பிரிந்து செல்லும் படி வற்புறுத்துகின்றனர். இது குறித்து போலீசில் புகார் கொடுக்க சென்றால் போலீஸ் அதிகாரிகள் புகாரை வாங்க மறுக்கின்றனர்.

மனைவி, மாமியார் மீது வழக்குப்போடுவதாக போலீசார் மிரட்டுகின்றனர். செல்போனில் மிரட்டுபவர்கள் எனது தந்தையின் பெயரை சொல்லி தான் பேசுகின்றனர். எனது குடும்ப பிரச்சினையை கட்சி தலைவரிடம் எடுத்து சென்று முன்வைக்க விரும்பவில்லை. எனது மனைவி, மாமியாருக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும். செல்போனில் மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் திடீரென பேட்டி கொடுக்க காரணம் கர்ப்பிணியான எனது மனைவிக்கு தொடர் மிரட்டல் வருவதால் தான். நான் தி.மு.க.வை சேர்ந்தவன் தான். தந்தையை எதிர்த்து நான் அரசியல் செய்யவில்லை. நான் அ.தி.மு.க.வில் சேரும் எண்ணம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சூர்யா சிவாவின் மனைவி அதீனா பிரதீஷா வீட்டில் நடனப்பள்ளி நடத்தி வருகிறார். மாமியார் பிரேமம் குமாரி மார்ஷல் திருச்சியில் தனியார் கல்லூரியில் டீனாக பணியாற்றி வருகிறார். இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக எம்.பி.யான தந்தை மீது மகன் பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தான் அவர். திருச்சி சிவா குடும்பத்தை பற்றி திருச்சி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தை பூர்வீகமாகக்கொண்டவர்,

திருச்சி சிவாவிற்கு தேவிகாராணி என்ற மனைவியும் இரண்டு பெண் குழுந்தைகளும் ஒரு மகனும் இருந்தார்கள். இவர்களில் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு மனைவி காலமானார். மூத்த மகள் பெயர் காயத்ரி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவரை காதல் பதிவு திருமணம்  செய்து அப்போது காயத்ரியின் கணவர் முத்துகுமார் என் மாமானர் என்னை கொல்லப்பார்கிறார் எங்களை காப்பாற்றுங்கள் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து அந்த காதல் திருமணத்தை ஊருக்கு அறிமுகம் செய்தார். தற்போது

 தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.

இரண்டாவது மகள் பத்மப்பிரியா இவர் மருத்துவ மேற்படிப்பு படிக்கையில் தன்னுடன் படித்த, பழனியில் பெயர் பெற்ற சித்தநாதன் குடும்பத்து பையனான குமரகுருபரன் என்பவரை காதலித்தார் பெரும் போராட்டத்திற்குப்பின் இருவரின் திருமணமும் திருச்சியில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில்  07.02.2013 அன்று நடைபெற்றது. அந்த திருமணப்பத்திரிக்கையில் அனைத்து கட்சியின் தலைவர்கள் பெயரையும் கொட்டை எழுத்துக்களில் போட்ட திருச்சி சிவா,  ஆண்டுகள் பல கடந்தும் தன் மூத்த மருமகன் பெயரைக்கூட திருமண அழைப்பிதழில் போடவில்லை மகளின் பெயருக்கும் பின்னால்  காயத்ரி சிவா என்றே குறிப்பிட்டிருந்தார்.

இப்படி சிவா தான் காதலித்து திருமணம் செய்து கொண்டது போலவே தன் குழந்தைகள் திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே அவருடைய முந்தைய நடவடிக்கைகள் காட்டுகிறது.

இந்த சூர்யாவின் இந்த காதல் திருமணத்தை திருச்சி சிவாவின்எதிர்ப்பதற்கு   இயக்குவது அவருடைய தங்கையில் கணவர் முத்துகுமார். காதல் திருணமத்தை செய்வதை கில்லாடி என்று பெயர் எடுத்தவர்.

 

Leave A Reply

Your email address will not be published.