அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் தேர்வில் நடக்கும் உள்குத்து ரகசியம்

0 29

 

பல கட்ட அறிக்கை போர்களுக்கு பிறகு   அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலையில் இருக்கிறது. 

 

தமிழகத்தில் உள்ள 534 பொறியியல் கல்லூரிகளுக்கும் தலைமை பொறுப்பாக உள்ள துணைவேந்தர் பதவி நியமனம் செய்வதில் சர்ச்சை நீடித்துக்கொண்டே இருக்கிறது.  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் விரைவில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்றும் அதுவரை பொறியியல் சேர்க்கையே நடக்ககூடாது என தொடர்ந்து    அறிக்கை  வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்.

 இந்த  தொடர் அறிக்கைகளுக்கு பிறகு கடந்த மாதத்தில் ஒரு முறை  தமிழக உயர் கல்விதுறை அமைச்சர் கே. பி. அன்பழகன் 3 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பிவிட்டோம். இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார்.

 உண்மையில் கவர்னர் மாளிக்கைக்கு பட்டியலையே இன்னும் அனுப்பவில்லை என்கிறார்கள்.

இதற்கு அடுத்த சில நாட்களிலே சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக ராஜாராம் என்பவரிடம் ரூ50 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பகிங்கரமாக குற்றம் சாட்டினார்.

உண்மையில் அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் தேர்வில் என்ன பிரச்சனை நடக்கிறது என்று நாம் அண்ணா பல்கலைகழக வட்டாரத்தில் விசாரித்த போது…

தமிழகத்தில் உள்ள 534 பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலான பொறியியல் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளமே வழங்கப்படாமல் உள்ளது.

அவர்களுக்கு முறையாக சம்பளம் வேண்டும் என்றால் வருகின்ற கல்வியாண்டில் 2017 -2018  குறைந்தது 2 மாணவர்களை சேர்த்து விட்டால் தான் சம்பளம் கிடைக்கும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்களாம் தனியார் பொறியியல் கல்லூரி முதலாளிகள்.

இது இல்லாமல் அட்மிஷன் சிறப்பு சலுகையாக நேரடியாக ஒரு மாணவனை சேர்த்து விட்டால் 40,000 ரூபாய் கமிஷன் தொகையும், கவுன்சிலிங் மூலம் மாணவனை சேர்த்துவிட்டால் 10,000 ரூபாய் கிடைக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இது போக குறைந்தது 40 மாணவர்களை சேர்த்துவிடும் கல்வி புரோக்கர் ஏஜெண்டுகளுக்கு பாங்காங் சுற்றுபயணம் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பு கொடுத்து தான் இந்த வரும் வருடத்தை மாணவர்கள் சேர்க்கை நடத்தி கல்லூரியை தக்கவைத்துக்கொள்ளும் நிலையில் உள்ளது.

மாணவர்கள் சேர்க்கை இவ்வளவு திண்டாட்டம் இருக்கும் போது துணைவேந்தர் பதவிக்கு மட்டும் எப்படி  கோடிக்கணக்கில் விளையாடுகிறது என்று விசாரித்தால்

துணைவேந்தர் பதவிக்கு தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் கரு முத்து கண்ணன் – மதுரை தியாகராஜ கல்லூரி சேர்மன்,  மற்றும் ஹமோத்குமார் சின்கா ஐ.ஏ.எஸ் இவர்கள் கைகளில் தான் யார் துணைவேந்தர் என்கிற பட்டியலே இருக்கிறது என்கிறர்கள்.

இதுவரை 150 பேர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.

இதில் கடைசியாக டாப் 20 பேர் தேர்வு செய்திருக்கிறார்கள்.

இதில் ஆந்திராவை சேர்ந்த விக்னாஸ் பல்கலைகழகத்தை சேர்ந்தவர்,

எஸ்.ஆர்.என். சன்ஸ் ராமகிருஷ்ண கல்லூரியை சேர்ந்த ஒருவர்,

எஸ்.எஸ்.என். கல்லூரியை சேர்ந்தவர் ஒருவர்.

கே.எஸ்.ஆர். கல்லூரிரை சேர்ந்த ஒருவர்,

ரெங்கராதன் பொறியியல் கல்லூரியை சேர்ந்த ஒருவர்,

கிருஷ்ணா கல்லூரியை சேர்ந்த ஒருவர்,

பி.எஸ்.ஜி கல்லூரியை சேர்ந்தவர்,

மெப்கோ கல்லூரியை சேர்ந்தவர்,

திருச்சி எம்.ஏ.எம். கல்லூரி அதிபர் மாலுக்,

பெரியார் மணியம்மை சேர்ந்த  ஒருவர்,

தஞ்சை சாஸ்திரா பல்கலைகழகத்தை சேர்ந்த ஒருவர்,

பனிமலர் எஸ்.ஆர்.எம்,

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் முன்னால் துணைவேந்தர் மீனா

ஆகிய பல்கலைகழகத்தை சேர்ந்தவர்கள் முக்கிய பட்டியலில் இருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க பாரதிதாசன் பல்கலைகழக முன்னால் துணைவேந்தர்   மீனா – திருச்சியில் கலெக்டராக இருந்து ராஜாராம் என்பவர் மூலம் மீடியேட்டர் ஒருவரை திருச்சிக்கே வரவழைத்து பேசியிருக்கிறார்.

இதில் ஆட்சி நடத்தும் மன்னார்குடி வகையரா  சார்பில் மதுரை அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள ஒருவரை தேர்வு செய்து அவரிடம் எந்த பணமும் வாங்க வேண்டாம்.

இப்போது துணைவேந்தராக நியமனம் செய்யுங்கள் பிறகு தவணையில் அவரிடம் வாங்கி கொள்ளலாம் என்று சிபாரிசு செய்திருக்கிறார்கள் மன்னார்குடி வகையறா

பல்கலைகழக வட்டாரத்தில் ஏன் துணைவேந்தர் பதவி தனியார் கல்லூரியை சேர்ந்தவர்களுக்கே  தர வேண்டும் அரசு பல்கலைகழகங்களில், அல்லது. என்.ஐ.டி. அரசு சார்ந்தவர்களை சிபாரிசு செய்யலாமே என்றும் தனியார் கல்லூரி முதலாளிகளை நியமிப்பது ஆபத்தானது என்கிற குரல்கள் வலுத்துக்கொண்டு இருக்கும் நிலையில் தான்.

ஏற்கனவே துணைவேந்தராக இருந்த ராஜாராம் மீண்டும் அந்த பதவிக்கு வருவதற்கு தான் கடுமையாக முயற்சி செய்தார்.

இவருக்கு பல்கலைகழக வட்டாரத்திலே ஊழல் குற்றசாட்டுகள் இருப்பதால் எதிர்ப்புகள் எதிர்ப்புகள் அதிகமானதால் வேறு ஒருவரை நியமனம் செய்தால் இவர் மீது உள்ள ஊழல்களை தோண்ட வேண்டி இருக்கும்  தன்னுடைய நாடார் சமூகத்தை சேர்ந்த ஒருவரையே மீண்டும் துணைவேந்தராக நியமிக்கலாம் என்றும்

அரசு கல்லூரி பேராசிரியர் யாரேனும் நியமித்தாலும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு பிரச்சனை கொடுப்பார்கள். அதனால் என் கல்லூரியை சேர்ந்த ஒருவரை நியமிக்கிறேன் என்று முடிவு சொன்னாராம். தேர்வு குழு உறுப்பினர். கருமுத்துகண்ணன்.

தேர்வு குழு உறுப்பினர். கருமுத்துகண்ணன்.  இவர் மிகப்பெரிய தொழில் அதிபர் என்பதால் சென்னையில் உள்ள  சிவசண்முக நடார் – எஸ்.எஸ்.என். கல்லூரி முதல்வரையே துணைவேந்தராக நியமிக்கலாம் என்று முடிவு செய்து இதற்கு விலை  – 100 சி என்றும் நிர்ணயம் செய்தது. அ.தி.மு.க அரசும் பிரச்சனையில்லாம் முடிந்தால் சரி.. சரி.. தலையாட்டி விட்டதாம்.

பண நெருக்கடியான நேரத்தில் எப்படி இந்த 100 சி ” ரெடி பண்ணுவார்கள் என்றால் ஒவ்வொரு தனியார் பொறியியல் கல்லூரியும் தலா 1சி கொடுத்து விட வேண்டும்.

அதற்கு கைமாறாக கு யுஜிசி நிதி வரும் போது அந்த  நிதியை சம்மந்தப்பட்ட  கல்லூரிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.

எல்லாம் பஞ்சாயத்தும் முடிந்த நிலையில் அநேகமாக இன்றோ அல்லது நாளையே துணைவேந்தர் அறிவிப்பு வெளிவரலாம் என்கிறார்கள்

 

Leave A Reply

Your email address will not be published.