திருச்சி சோனா-மீனா தியேட்டர் பவுன்சர் கொலை முயற்சி வழக்கில் சிறை !

0 49

திருச்சி சோனாமீனா தியேட்டர் பவுன்சர்கள் கொலைமுயற்சி வழக்கில் சிறை !

சென்னை மாதிரி பெரு நகர திரையரங்குகளில் சோதனை செய்தவற்காக இயந்திரங்களை பயன்படுத்துகிறார்கள் ஆனால் திருச்சி மாதிரியான நகரங்களில் சோதனை செய்வதற்கு பவுன்சர்களை பயன்படுத்துகிறார்கள்.

இந்த பவுன்சர்கள் பொதுமக்களை சோதனை என்கிற பெயரில் தடவி பார்ப்பது, குடிப்பதை பரிசோதனை செய்ய ஊதி பார்ப்பது என்பது மிகவும் அநாகரிகமாக இருக்கும். இது ஒவ்வொரு தனிமனித உணர்வுகளை தட்டி பார்க்கும் செயல்.

இந்த பவுன்சர்கள் இந்த வேலையை மட்டும் அல்ல..

தியேட்டரில் சின்ன பிரச்சனை எது நடந்தது போலிஸ் துறைக்கு தகவல் சொல்லாமல் இந்த பவுன்சர்களை வைத்தே அதிரடி தாக்குதல் நடத்துவார்கள்.

திருச்சி சேனாமீனா திரையரங்கத்தில் ரவி என்பவா் படம் பார்த்துள்ளார். அப்போது கல்லுகுழி பகுதியை சோ்ந்த அஸ்வின், குமார், விஜய் உள்ளிட்ட 7 மாணவா்கள் திரையரங்கில் படம் பார்த்து கொண்டிருந்த ரவியின் அருகாமையில் சென்று கத்தி கூச்சல் போட்டுள்ளனர்.

இதைக்கண்ட ரவிக்கு அருகாமையில் அமர்ந்திருந்த அருள் என்பவா் மாணவா்களை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அவா்கள் அருளை தாக்கியுள்ளனா்.

இதுகுறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள திரையரங்க பவுன்சர் கெவினிடம் கூறியதையடுத்து மாணவா்களை வெளியேற்ற முயற்சித்த கெவினுக்கு வழக்கம் போல்  அந்த மாணவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த கெவின், அஸ்வின், விஜய் உள்ளிட்ட இருவரையும் கத்தியால் குத்தி உள்ளார்.

இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கத்தியால் குத்திய கெவின் தப்பியதால் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இரவு பணியில் இருந்து எஸ்.ஐ. சந்திரசேகர் தலைமையில் ஆன டீம் துரித விசாரணையினால் அன்று அதிகாலை தலைமறைவாக இருந்த கெவினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முன்பெல்லாம் தியேட்டருக்கு பாதுகாப்பு என்று ரவுடிகளை வைத்திருப்பார்கள். இப்போது பெயரும் உருவமும் தான் மாறியிருக்கிறதே தவிர அவர்களின் செயல்களும் பேச்சுகளும் மாறவே இல்லை.

பவுன்சர்கள் எப்போதும் பொதுஜனத்தை பொது ஜனமாக பார்க்காமல் தனக்கு கீழ் உள்ளவர்கள் போலவே பார்க்கிறார்கள். மனித மோதல்கள் இதனால் அதிகரித்தே வருகிறது. கவனிப்பார்களாக தியேட்டர் நிர்வாகிகள்.

 

Leave A Reply

Your email address will not be published.