​ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

0 15

​ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம்  அறிவித்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (திங்கள்கிழமை) மாலையுடன் முடியவுள்ள நிலையில் தேர்தலை நடத்துவதா ஒத்திவைப்பதா என தேர்தல் ஆணையம் இன்று (திங்கள்கிழமை) மாலைக்குள் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. தமிழகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில் பல மூத்த  அமைச்சர்கள் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வேண்டிய பணப்பட்டுவாடா குறித்த தகவல் அடங்கிய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அமைச்சரின் உதவியாளர் மற்றும் உறவினர்களின் வீடுகள் என பலரின் வீடுகளில் நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணமும் சிக்கியது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகம் செய்யப்பட்டதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைத்தது. பின்னர் சில மாதங்களுக்கு பிறகு நடத்தப்பட்டது. இதனை போல தற்போதும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை மாலை தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையில் தேர்தல் அணைய கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் லக்கானியின் அறிக்கை குறித்து தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலித்தது.மேலும் வருமான வரித்துறை மற்றும் விக்ரம் பத்ராவின் அறிக்கைகள் குறித்தும் பரிசிலீக்கப்பட்டதுடன்,  

  ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து தலைமை தேர்தல் ஆணையம்  அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைதேர்தலை ஜூன் 4ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.