பணியில் இருந்தபோது உயிரிழந்த போலீசாரின் குறைகளை கேட்ட போலீஸ் கமிஷனர் அருண் .

0 31

பணியில் இருந்தபோது உயிரிழந்த போலீசாரின் குறைகளை கேட்ட போலீஸ் கமிஷனர் அருண் .

திருச்சி மாநகர காவல்துறையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பணியில் இருந்தபோது உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தினருக்கான குறைதீர்க்கும் முகாம் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டு, போலீசாரின் குடும்ப உறுப்பினர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதில் மொத்தம் 45 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது பணியில் இருந்தபோது உயிரிழந்த போலீசாரின் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உதவி செய்து தருவதாகவும், அரசிடம் இருந்து கிடைக்கவேண்டிய நிலுவைத்தொகையை அவர்களுக்கு உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், இறந்த போலீசாரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாகவும் போலீஸ் கமிஷனர் கூறினார். மேலும், அந்தந்த பிரிவு கண்காணிப்பாளர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த பணிகள் தொய்வின்றி விரைந்து நடக்க நுண்ணறிவுபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலத்தை தொடர்பு அதிகாரியாகவும் நியமித்து கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.