திருச்சி விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளிடம் விண்ணப்பிக்க அழைப்பு

0 57

திருச்சி விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளிடம் விண்ணப்பிக்க அழைப்பு

விளையாட்டு விடுதியில் சேர திருச்சி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 23 விளையாட்டு விடுதிகள் மற்றும் 5 விளையாட்டுப் பள்ளிகள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.

விளையாட்டு விடுதிகளில் தங்கி தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட்(மாணவர்கள் மட்டும்), கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டி க்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபாடி, துப்பாக்கி சுடுதல், மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ், கடற்கரை கையுந்துபந்து மற்றும் வில்வித்தை போன்ற விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளாக விளங்குவதற்கு 7ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிக்கு வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் அல்லது www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அந்தந்த மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்களிடம் வரும் 20தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டு அரங்கம், திருச்சி என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.