எனது மகனைவிட மருமகளுக்கு அதிக வயது ! நான் ஜாதி பார்க்கவில்லை திருச்சி சிவா கவலை !

0 36

எனது மகனைவிட மருமகளுக்கு அதிக வயது ! நான் ஜாதி பார்க்கவில்லை திருச்சி சிவா கவலை !

‘’எனது மகனுக்கும், மருமகளுக்கும் உள்ள வயது வித்தியாசம் கவலை தருகிறது,’’ என்று திமுக எம்.பி., திருச்சி சிவா விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சி சிவாவின் மகன் மணிவண்ணன் என்ற சூர்யா மற்றும் அவரது மனைவி பிரதியுஷா ஆகியோர் திருச்சி செய்தியாளர்கள் மன்றத்தில் ஊடகங்களை சந்தித்தனர்.

அப்போது, “ எனக்கும் பிரதியுஷாவுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது மனைவி வேறு மதம் மற்றும் சாதியைச் சேர்ந்தவர். இதனால் எங்கள் திருமணத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் என் தந்தை திருச்சி சிவா, காவல்துறை அதிகாரிகள் மூலம் என் மனைவியை பிரிந்துவிடுமாறு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். சில நேரங்களில் அவரே எனக்கு போன் செய்து, என் மனைவியை பிரிந்து வந்துவிடுமாறு மிரட்டல் விடுக்கிறார்” என மணிவண்ணன் குற்றம்சாட்டினார்.

 

மேலும், தான் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனியாக வசித்து வரும் தங்களை காவல் அதிகாரிகளின் துணையுடன் திருச்சி சிவா மிரட்டுவதாகவும் பிரதியுஷாவும் புகார் தெரிவித்தார்.

இவர்கள் இருவரின் குற்றச்சாட்டு குறித்து திருச்சி சிவா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், எனது மகனைவிட, மருமகளுக்கு கூடுதல் வயதாகிறது. இது எனக்கு மிகவும் கவலை தருகிறது. வயதாகும்போது, எனது மகனை பார்த்துக் கொள்ள ஆளில்லாமல் போய்விடுமோ என்ற அச்சமே எனக்கு வருகிறது. அதனால்தான் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ஜாதி பாரபட்சம் எதையும் நான் பார்க்கவில்லை,’’ என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.