திருச்சி பெல் நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சிக்கு விண்ணபிக்க கடைசி தேதி ஏப்ரல் 20.

0 48

திருச்சி பெல் நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சிக்கு விண்ணபிக்க கடைசி தேதி ஏப்ரல் 20.

அனைவராலும் பெல் என அழைக்கப்படும் மத்திய பொதுத் துறை மின்சாதப் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான பி.எச்.இ.எல் நிறுவனத்தின் திருச்சி கிளையில் 2017 – 2018-ஆம் ஆண்டிற்கான 770 ஃபிட்டர், வெல்டர் (ஜி & இ), டர்னர், மெஷினிஸ்ட், ஏசி மற்றும் குளிர்பதன, கருவி மெக்கானிக், மின்னணு மெக்கானிக், ஓயர்மேன், எலக்டிரீசியன், கார்பெண்டர், பிளம்பர், எம்எல்டி நோயியல் பிரிவுக்கான தொழில் பழகுநர் பயிற்சிக்கான (அப்பரண்டீஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 770

பணியிடம்: திருச்சிராப்பள்ளி

துறைவாரியான தொழில் பழகுநர் பயிற்சிக்கான காலியிடங்கள் விவரம்:

 1. Fitter – 236
 2. Welder (G&E) – 191
 3. Turner – 30
 4. Machinist – 31
 5. Electrician – 63
 6. Wireman – 30
 7. Electronic Mechanic – 30
 8. Instrument Mechanic – 23
 9. AC & Refrigeration – 20
 10. Draughts Man (Mechanical) – 15
 11. Programme & System Administration Assistant – 36
 12. Forger & Heat Treater – 10
 13. Carpenter – 26
 14. Plumber – 26
 15. MLT Pathology – 03

 

வயதுவரம்பு:

 

01.04.2017-ஆம் தேதியின்படி 18 – 27 க்குள் இருக்க வேண்டும்.

 

தகுதி: சம்மந்தப்பட்டதுறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்

www.bheltry.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

உதவித்தொகை:

 

பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அரசு விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.04.2017

 

தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விவரம் 25.04.2017 அன்று வெளியிடப்படும்.

 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bheltry.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave A Reply

Your email address will not be published.