திருச்சிராப்பள்ளி பன்னாடு விமானநிலையத்திற்கு இது புதுசு !

0 34

திருச்சிராப்பள்ளி பன்னாடு விமானநிலையத்திற்கு இது புதுசு !

 

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் “பயணிகள் சுய வருகைப்பதிவு மற்றும் புறப்பாடு உறுதிச்சீட்டு வழங்கும் இயந்திரம்” (Self Check-in Kiosk) நிறுவப்பட உள்ளது.

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைப் பொருத்தமட்டில் நாளுக்குநாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பன்னாட்டு விமான பயணிகள்!

நடப்பு கோடைகால அட்டவணைப்படி,

புதிதாக,

 

மதியம் 2.00 மணிக்கு தினசரி மலிண்டோ ஏர் கோலாலம்பூருக்கும்,

இரவு 10.30க்கு ஏர் ஏசியா கோலாலம்பூருக்கும் சேவைகள் வழங்க உள்ளன.

 

ஜெட் ஏர்வேஸானது தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ள (விமானத்தின் “C” வகை பராமரிப்பின் காரணத்தால்) மதியம் 3.00 மணி சென்னை சேவையையும் மீண்டும் தொடரவுள்ளது.

 

குறிப்பாக,

 

காலை மற்றும் நள்ளிரவு வேலைகளில் ஒரே நேரத்தில் பல விமானசேவைகள் உள்ளதால், பயணிகள் முனையத்தில் கடுமையான தேக்கநிலை ஏற்படுகிறது.

புதிய பயணிகள் விமானமுனையம் கட்ட தற்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

எனவே பிரச்சினையை தற்காலிகமாக சமாளிக்க,

 

தானியங்கி பயணிகள் சுய வருகைப்பதிவு மற்றும் புறப்பாடு உறுதிச்சீட்டு (Self Check-in Kiosk) இயந்திரம் நிறுவப்பட உள்ளது.

 

இதனால்,

பயண உடைமைகள் (Baggage) இல்லாத, கைஉடைமைகள் (Hand Baggage) மட்டும் வைத்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் இந்த இயந்திரத்தை பயண்படுத்தி தங்கள் புறப்பாடு உறுதிச்சீட்டை (Boarding Card) பெற்றுக்கொண்டு,

பன்னாட்டு பயணிகள் எனில் குடியேற்றம் (Immigration) பிரிவையோ,

உள்நாட்டு பயணிகள் எனில் விமானப் புறப்பாட்டுக்கு முந்தைய பாதுகாப்புச் சோதனைப் பகுதியை (Security Hold Area) அணுகலாம்.

பயணிகள் முனையத்தின் தேக்கநிலை முடிந்தவரையில் தவிர்க்கப்படும்.

ஜெட் ஏர்வேஸ்,

மலிண்டோ ஏர் மற்றும்

ஏர் லங்கா விமான நிறுவனங்கள் இவ்வசதியை இவ்வியந்திரத்தின் மூலம் தங்களது பயணிகளுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

பயணிகள் சேவையில் எப்பொழுதும் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையம்!

Habeebullah Ubaidullah

Leave A Reply

Your email address will not be published.