ஜொலித்த திருச்சி தெப்ப திருவிழா !

0 30

மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோயிலில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
திருச்சியின் அடையாளமாகவும், தென்கயிலாயம் என பக்தர்களால் போற்றப்படுவது மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோயில்.

 


இக்கோயிலில் பங்குனி தெப்பத்திருவிழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கற்பக, பூத, கைலாச, வெள்ளி ரிஷப, யானை, நந்தி, தங்க குதிரை ஆகிய வாகனங்களில் தாயுமானவர் சாமி வீதி உலா நடைபெற்றது.

தெப்பத்திருவிழாவின் முக்கிய திருநாளான  (சனிக்கிழமை) மதியம், முதல் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து உற்சவ தாயுமானவர் (சிவபெருமான்), அம்பாளுடன் புறப்பட்டு தெப்பகுளத்தை வந்தடைந்தார்.

அங்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், தாயுமானவர் எழுந்தருளி 5 முறை தெப்பகுளத்தில் மிதந்த வண்ணம் வலம் வந்தார்.

தெப்பத்தில் வலம் வந்த சாமியை நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.