மீண்டும் பரவும் விவசாயிகள் புரட்சி.. !

0 41

மீண்டும் பரவும் விவசாயிகள் புரட்சி..

வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள், அடுத்தடுத்து பலியானார்கள். 300 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். வரலாறு காணாத அளவுக்கு கல்லணையும் காவிரியும் வறண்டு கிடக்கிறது. ஆனால் அரசுகள் மவுனமாக உள்ளன..

இந்த நிலையில் விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன்,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் நூதன போராட்டங்களை நடஹ்திய விவசாயிகள், அடுத்து சென்னையிலும் கடலில் இறங்கிப்போராட்டம், சாலையில் படுத்து போராட்டம் என நடத்தினார்கள். பல போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதனை அடுத்துத, டெல்லியில் போராட முடிவெடுத்தனர்.

 

கடந்த 27 தினங்களாக கழுத்தில் மனித மண்டை ஓடுகளைத் தொங்கவிட்டும், கைகளில் மண் சட்டிகளை ஏந்தியும், அரை நிர்வாணமாகவும், பிணமாகவும், மொட்டை அடித்தும், பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்தும், எலிக்கறி மற்றும் பாம்புக் கறி தின்னும் போராட்டங்களை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்தியாவின் தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடத்தி வருகின்றனர்.

 

இவர்களுக்கு ஆதரவாக நடிகர் விஷால், பிரகாஷ் ராஜ் இயக்குநர் பாண்டியராஜ், வட இந்திய விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்களான வைகோ, திருமாவளவன் என பலரும் டெல்லிக்குச் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்கள்.

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும்,மாணவர்கள், விவசாயிகள், விவசாய சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். கடந்த 19ம் தேதி திருச்சி உழவர் சந்தை அருகே அனைத்துக் கல்லுரி மாணவர் சங்கத்தினர் போராடி கைதானார்கள். அன்றிலிருந்து அந்தப்பகுதி காவல்துறை கண்காணிப்பில் உள்ளது. அதேபோல் கடந்த 27-ம் தேதி, திருச்சி லால்குடி அடுத்த புள்ளம்பாடியில் விவசாய சங்க தலைவர்கள், விஸ்வநாதன், பி.ஆர்.பாண்டியன், ராஜாசிதம்பரம், புலியூர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

பலகட்ட போராட்டங்களால் டெல்லியை அதிர வைத்துள்ள திருச்சி விவசாயிகளுக்கு நாடுமுழுவதும் ஆதரவு பெறுகிறது. பல அமைப்புகள், டெல்லியை நோக்கிப் புறப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

 

இந்நிலையில் அய்யாக்கண்ணுவிடம் பேசினோம்.

 

“எனக்கு 30 ஏக்கர் இருக்கு, கடந்த வருஷம் 10 ஏக்கர் சாவடி பண்ணினேன், 60,000 நட்டம், இந்த வருஷம் 6 ஏக்கர் பண்ணி ஒண்ணுமே கிடைக்கல சுத்தமாகவே அழிஞ்சுடுச்சு,

 

காவேரி டெல்டா மற்றும் மேட்டுப்பகுதியும் சேர்த்து மொத்தம் 3இலட்சம் ஏக்கர் விவசாயம் பண்ணுவோம். இந்த வருஷம் அதில் 20,000 ஏக்கர் தான் பண்ணியிருக்கிறார்கள், அதாவது – 90 சதவீதம் விவசாயம் பண்ணல, 10 சதவீதம் விவசாயம் விதைச்சுயிருக்காங்க, இப்போது அறுவடைநேரம் நல்லா மழைய பெய்த்து இருக்குகிறதையும் அழிச்சுடுச்சு,

270 பேர் இதுவரைக்கு இறந்து போயிருக்கிறார்கள், ஆனால் அரசாங்க தற்கொலை பண்ணினாவுங்க இவ்வளவுதான் ஒரு பட்டியல் போடுது. எங்களை மனுஷங்களாவே மதிக்க மாட்டேங்குது.

 

விவசாயிகளை இரண்டாம் தரம் குடிமக்களா பாக்குறாங்க, இந்த அரசியல்வாசிகள், நெல் விலை ஏறக்கூடாது, பால் விலை ஏறக்கூடாது, எந்த உணவு தானியம் விலையும் ஏறக்கூடாதுன்னு நினைக்கிறார்கள், நாங்கள் என்ன நினைக்கிறோம்னா, அரசு ஊழியர்களுக்கு 100 ரூபாய் சம்பள உயர்வு குடுத்தீங்கன்னா எனக்கு 25ரூபாயாவது குடுங்கன்னு சொல்றோம்.

 

எங்களைச் சரிசமமா நடத்துங்கண்ணு கூட நினைக்கவில்லை, எங்களை நான்காம் தர குடிமக்களாவது நினைச்சுக்கோங்கன்னு சொல்றோம். இல்லைன்னா எங்க கிட்ட விலைக்கு வாங்கிட்டு, பால், நெல், கரும்பு இதை எல்லாம் மக்களுக்கு இனாம் குடுங்க,

 

 

எனக்கு 25 மடங்கு மற்ற எல்லொருக்கும் எல்லோருக்கும் 220 மடங்கு ஏறியிருக்கும்,

வாத்தியார் சம்பளம் படி பார்த்தால் நான்கில் ஒரு பாகம் ஆவது குடுத்தா கூட அதாவது 9,000 ரூபாய் குடுக்க வேண்டும் ஆனால் 2,300 ரூபாயே கொடுக்க மாட்டேங்குது. நா எங்கே போய் அழுதாலும் கேட்க நாதியில்ல, இந்தப் பத்திரிகை மட்டும் இல்லைன்னு வச்சுக்கோங்க நான் சாவுறது கூட வெளியே தெரியாது.

 

நார்தை நதி நீர் மேலாண்மை வாரியத்தை 3 மாதத்தில் அமைச்சுட்டாங்க, கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரியம் 6 மாதத்தில் அமைச்சுட்டாங்க, தமிழ் நாட்டு பிச்சைக்கார விவசாயிகளுக்கு 1990 போட்டு – 2007 ல் நீதிமன்றம் தீர்ப்பு வந்து அதை 20013 அரசு இதழில் வெளியாகி இன்னமும் மேலாண்மை வாரியம் அமைக்கா ஓட்டுக்காக.. தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாதென்று கர்நாடகத்திற்கு சப்போட் பண்ணி தமிழக விவசாயிகளை ஈரத் துண்டு போட்டுக் கழுத்தை எல்லாம் கொலை கொலையா அறுக்கிறார். இதை மாநில அரசாங்கமும் எங்களை அநாதையாக ஆக்கிட்டாங்க, என்னுடைய அரிசி, என்னுடைய பால், காய்கறி, பழம் தானியம் எல்லாம் எங்க கிட்ட விலை மலிவா விலைக்கு வாங்கி, அதை வியாபாரம் என்கிற பெயரில் மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள் மிடில்மேன்.

 

பால் விலை ஏறக்கூடான்னு சொல்றாங்க, ஆனால் ஒரு தண்ணீ பாட்டி 24 ரூபாய்க்கு விக்குறாங்க, இப்படி எங்கிட்ட வாங்கி இப்படி மக்களிடம் கொள்ளையடிக்கும் இவர்கள் தான் மிடில்மேன், அவுங்க தான் அளும் அரசியல்வாதிகளுக்கு, எதிர் கட்சிகளுக்கு இலஞ்சம் கொடுப்பவர்கள், எங்களுக்குக் கடன் தள்ளுபடி பண்ணு அரசாங்கத்துக்கிட்ட கேட்ட விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி கிடையாது, ஆனால் இந்த மிடில்மேனா வளர்ந்திருக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கு 5இலட்சம் கோடி கடன் தள்ளுபடி பண்றான். ஏன்னா அவன் 30 சதவீதம் கமிஷன் தரான். அதாவது 1 இலட்சம் கோடி தள்ளுபடி பண்ணினா 30,000 கோடி அரசில் கட்சிகளுக்கு நிதி கமிஷனும் கொடுப்பானுங்க, இதை வச்சு விவசாயிகளுக்கு 500, 1000, ஓட்டு பணம் கொடுத்து அந்த ஒட்டையும் வாங்கிடுவாங்க,

 

நாங்களும் எலியை புடுச்சு தின்றோம், கோமனோத்தோடு போராட்டம் பண்றோம். பிச்சைஎடுத்தோம், இப்ப பாம்பு கறியும் தின்னு போராட்டம் பண்றோம். விவசாயினு சாவு சொல்து இந்த அரசாங்கங்கள் என்று அங்கலாய்த்தார்.

 

இதற்கு முன் விவசாய புரட்சி

 

‘தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவரான நாராயணசாமி நாயுடு,  கடந்த 1972-ஆம் ஆண்டு அப்போது உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஜூன் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை காய்கறிகளையும் பாலையும் விவசாயிகள் நகரங்களுக்கு அனுப்புவதை நிறுத்தினார்கள்.

 

ஆனால், அந்த போராட்டத்தை அரசு கண்டு கொள்ளாத நிலையில், அடுத்தக்கட்டமாக விவசாயிகள் 07.06.1972 அன்று கோவையில் புதுமையாக மாட்டு வண்டிப் போராட்டத்தை நடத்தினார்கள். மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள், கோவை முக்கிய  சாலைகளிலும் , கோவை  மத்திய சிறைச்சாலைக்கு முன்பும் நிறுத்தப்பட்டன. கோவை நகரம் நிலைகுலைந்த்தது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் அவர்களைப் பாராட்டி ‘மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்’ என எழுதின. இறுதியில் அரசு அரசு பணிந்தது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். நாராயணசாமி நாயுடு மற்றும் அவரது நண்பர் சிவசாமி ஆகியோரின் வீடுகளுக்கு  நேரில் சென்று விவசாயிகள் பிரச்சினை தீர்க்கப்படும் என உறுதி அளித்தார்.  இந்த போராட்டத்தின் எதிரொலியாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கப் பெற்றது. சிறையில் இருந்த விவசாயிகளும் விடுவிக்கப்பட்டார்கள். இதுபோன்று பல கட்டங்களில் அரசுக்கு விவசாயிகள் பாடம் புகட்டி இருக்கிறார்கள்.

இப்போது தமிழகத்தில் காவிரி,நெடுவாசல், முல்லைப்பெரியாறு, தேனி நைட்ர்னோ என பல பிரச்னைகள் கண் முன்னே, விவசாயத்தை அழிக்கும் திட்டங்களாக உள்ளன.  அனைத்துக்கு மத்தியில் விவசாயிகளை மறந்த நாடு முன்னேறியதில்லை என்பதுதன் எதார்த்தம்

 

விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்

 

 

 

1970 விலை 2016 விலை
நெல் (60 கிலோ) 40 880
கரும்பு 90 2,300
வாத்தியார் 90 36000
வங்கி மேலாளர் 150 66,000
நகை பவுன் 120 24,000
எம்.எல்.ஏ சம்பளம் 250 55,000
கரும்பு வெட்டுகூலி 5ரூபாய்

1,000

 

Leave A Reply

Your email address will not be published.