பிரிந்து கிடந்த கிறிஸ்தவ இயக்கங்களை இணைத்த குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்.!
குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு திருச்சியில் கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு பவனியாக சென்றனர். இதனை தொடர்ந்து ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி நேற்று காலை திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து குருத்தோலை ஞாயிறு பவனி புறப்பட்டது. அப்போது கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு கிறிஸ்தவ வாழ்த்து பாடல்களை பாடியவாறு முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர். பின்னர் மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்தனர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. இதேபோல் திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை தேவாலயம், மெயின்கார்டுகேட் தூய மரியன்னை ஆலயம் உள்பட திருச்சியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களின் வெளியே சாலைகளில் குருத்தோலை ஞாயிறு பவனியும், அதனை தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
வெஸ்டரி பள்ளி மைதானம்
இது வரை குருத்தோலை ஞாயிறை ஆர்.சி.பிரிவினர் மட்டும் தங்கள் திருச்சபையின் சார்பில் ஆங்காங்கே நடத்திவருவது வழக்கம்
அதுவும் இல்லாமால் தனித்தனியே இருக்கும் கிறிஸ்தவ இயக்கங்கள் இதுவரை இணைந்து செயல்படுவது என்பது நெருக்கடியான கால கட்டத்தில் மட்டும் தான் ஒன்று சேருவார்கள் ஆர்பாட்டமோ, ஊர்வலமோ, அதுவும் எதிர்ப்பு குரல் கொடுக்கும் இடமாக தான் இருக்கும்.
ஆனால் இந்த முறையில் அனைத்து கிறிஸ்தவ இயக்கங்களும் இணைந்து குருத்தோலை ஞாயிறை கொண்டாடியது தான் சிறப்பு
ஞாயிறு மாலை திருச்சபைகளில் நடக்கும் சிறப்பு ஆராதனை அனைத்தையும் ரத்து செய்தனர் கிறிஸ்தவர்கள்.
திருச்சியில் இருக்கும் ரோமன் கத்தோலிக், சி.எஸ்.ஐ, லூத்திரன், பெந்தேகொஸ்தே என்று பல்வேறு பிரிவு கிறிஸ்தவர்கள் எல்லோரும் அனைவரும் இணைந்து திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள வெஸ்டரி பள்ளி மைதானத்தில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு பவனியாக முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் மைதானத்திற்கு வந்தடைந்தனர். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குருத்தோலை ஞாயிறாக கருதப்படுகிறது.
கோன்ஷா