திருச்சி நீதிமன்றத்தை கலங்கடிக்கும் மர்ம கடிதம் !. அதிர்ச்சியில் வழக்கறிஞர்கள் .
நீதிமன்றத்தை கலங்கடிக்கும் மர்ம கடிதம் !. அதிர்ச்சியில் வழக்கறிஞர்கள் .
சமூகத்தில் பெண்களுக்கு மதிப்பு தரப்பட வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்கள் நடத்தப்பட வேண்டும் என்கிறது இந்திய அரசமைப்பு சட்டம். சட்டம் பயின்று வழக்குரைஞர்களாக பணியாற்றுபவர்களையே குறி வைத்து மர்ம மனிதன் எழுதிய மர்ம கடிதத்தால் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தினரும், பெண் வழக்கறிஞர்களும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
22-3-17 அன்று திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தினருக்கு தபால் வருகிறது. அதேப் போல பெண் வழக்கறிஞர்களுக்கும் தபால் வருகிறது. தபாலை பிரித்து படித்தவர்களுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் உளவியல் ரீதியாக துன்புறுத்தும் விதமாக மன நிலை பாதிக்கும் வகையில் பல்வேறு குற்றச்சாட்டுக் கருத்துக்களை ஏடாகூடாமாக எழுதியுள்ள கடிதம் தான் அதிர்ச்சிக்கான காரணம்.
பிரபலமான குற்றவியல் வழக்கறிஞரையும், பெண் வழக்கறிஞரையும் தொடர்பு படுத்தியுள்ள முகவரியில்லா மொட்டைக் கடுதாசியினால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் சம்பந்தப்பட்டவர்கள். ஆண்,பெண் வழக்கறிஞர்களை தொடர்பு படுத்தி வரும் கடிதம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பு புகராக வந்த மொட்டை கடிதமும் தற்போது வரும் கடிதமும் ஒத்துப் போகிறது. இக்கடிதம் தொழிற் போட்டியினால் நடைபெறுகிறதா அல்லது ஒருவரது நன்மதிப்பை சிதைக்க நடை பெறும் முயற்சியா என்பதை கண்டறியும் முனைப்போடு மர்ம கடித மர்ம மனிதனை கண்டறிய வழக்கறிஞர்கள் களம் கண்டு வருகிறார்கள்.
சங்க தேர்தல் வரும் நேரத்தில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
பெண் வழக்கறிஞர்கள் கொடுத்த புகார் கடிதத்தில் 5 பேரை குறிப்பிட்டு கொடுத்திருக்கிறார்கள். – அதன் மீது போலிஸ் நடவடிக்கை என்ன ? என்பது பற்றி விரிவாக பிறகு அலசுவோம்.