திருச்சி சிக்னலில் தீப்பிடித்த கார் தப்பிய திருச்சி கல்லூரி நிர்வாகி !

0 22

திருச்சி சிக்னலில் தீப்பிடித்த கார் தப்பிய திருச்சி கல்லூரி நிர்வாகி !

இந்த சம்பவத்தில் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகி மற்றும் டிரைவர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருச்சி இனாம்குளத்தூர் அருகே உள்ள வெள்ளிவாடியில் தி நியு பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று உள்ளது. அந்த கல்லூரியின் நிர்வாகியை ஏற்றிக்கொண்டு தில்லைநகரில் இருந்து ஒரு கார் நேற்று காலை ஒத்தக்கடை முத்தரையர் சிலை வழியாக இனாம்குளத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. காரை இனாம்குளத்தூரை சேர்ந்த சோலைராஜ் என்பவர் ஓட்டினார்.

இந்த கார்  காலை 8.30 மணியளவில் முத்தரையர் சிலை அருகே சிக்னலுக்காக நின்றது. அப்போது காரின் முன்பக்கத் தில் இருந்து திடீரென்று புகை வந்தது. டிரைவர் சோலைராஜ் சுதாரிப்பதற்குள் காருக்குள் புகை மூட்டம் அதிகமாகி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் சோலைராஜும், கல்லூரி நிர்வாகியும் அலறி அடித்து கொண்டு உடனடியாக காரின் கதவை திறந்து வெளியே ஓடி வந்தனர்.

அப்போது அந்தப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் இது குறித்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தனபால் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு 2 வாகனங்களில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காரின் கதவை உடனடியாக திறந்து கல்லூரி நிர்வாகியும், டிரைவரும் வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக காரின் முன்பகுதியில் தீ பிடித்திருக் கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக செசன்சு கோர்ட்டு போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி நிர்வாகியின் பெயரை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.