உச்சக்கட்ட பரபரப்பில் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தேர்தல் !

0 21

திருச்சி நீதிமன்றம் சமீப காலமாக சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டுயிருக்கிறது.

அதிலும் குறிப்பாக

சீனியர் ,  ஜீனியர்  வழக்கறிஞர்களை குறிக்கும் ஆபாச கடிதம், பெண் வழக்கறிஞர்கள் சங்க இரண்டாக உடைந்தது, நீதிமன்றத்தில் நடக்கும் அடிக்கடி திருட்டு, சமீபத்தில் நீதிமன்றத்தில் திருட்டு  போன இடி தாங்கி, வழக்கறிஞர்கள் மோதல், வழக்கறிஞர் மீது வழக்கு, சீனியர் வழக்கறிஞர்களின் பேச்சு வார்த்தை என்று பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து இருந்தாலும்.

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு போட்டியாளர்களின் இறுதி பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தை விட இந்த வரும் போட்டி மிக கடுமையாக இருக்கும் என்பதை அவர்கள்  வாக்குசேகரிப்பிலே தெரிந்து கொள்ள முடிகிறது.

திருச்சி நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்தாலே ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து சர்ச்சையை விட சங்க தேர்தல் பற்றின பேச்சு தான் பரபரப்பாக இருக்கிறது. 

2017 – 2018 ஆண்டிற்கான திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தேர்தல் 13 – 04 – 2017 தேதி நடைபெறுகிறது.

தலைவர் பொறுப்பிற்கு பன்னீர்செல்வம், சுரேஷ்,

துணைத் தலைவர் பொறுப்பிற்கு மதியழகன், சிவகுமார், கமாலுதீன், இமயவள்ளி

செயலர் பொறுப்பிற்கு ஜெயசீலன், காமராஜ், ஸ்ரீ வித்யா,

இணைச் செயலர் பொறுப்பிற்கு சதீஸ் குமார், திவாகர்

உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

மேலும்

20, 10, 5 வருட பணி அனுபவமுள்ள வழக்கறிஞர்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் 5 செயற்குழு உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களை திருச்சி நீதிமன்றத்தில்  1430 உறுப்பினர்கள் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்கிறார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.