தலைவர் தி.மு.க. செயலாளர் அ.தி.மு.க. இது திருச்சி ஸ்டைல் தேர்தல் ரிசல்ட் !

0 22

தலைவர் தி.மு.க. செயலாளர் அ.தி.மு.க. இது திருச்சி ஸ்டைல் தேர்தல்

தமிழக அரசியல் களம் போல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தேர்தல் அமைதியுடனும், மகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

2017 – 2018 ஆண்டிற்கான திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தேர்தல் 13 – 04 – 2017 தேதி நடைபெற்றது.

தலைவர் பொறுப்பிற்கு பன்னீர்செல்வம், சுரேஷ்,

துணைத் தலைவர் பொறுப்பிற்கு மதியழகன், சிவகுமார், கமாலுதீன், இமயவள்ளி

செயலர் பொறுப்பிற்கு ஜெயசீலன், காமராஜ், ஸ்ரீ வித்யா,

இணைச் செயலர் பொறுப்பிற்கு சதீஸ் குமார், திவாகர்

உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

திருச்சி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள்

தங்கள் வெற்றிக்கு மிகுந்த சிரத்தையுடன் நோட்டிஸ் அடித்து மிகவும் விறுப்பாக தேர்தல் பணி ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

20, 10, 5 வருட பணி அனுபவமுள்ள வழக்கறிஞர்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் 5 செயற்குழு உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களை திருச்சி நீதிமன்றத்தில் வாக்களிக்கும் உரிமை 1430 உறுப்பினர்கள் இருந்தது.

அதிமுக அமைச்சர் வளர்மதி, எம்.எல்.ஏ பரஞ்சோதி, உள்ளிட்ட ஏராளமானோர் தவறாமல் வந்து வாக்களித்தனர்.

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் தலைவர் பொறுப்பிற்கு நின்ற தி.மு.க அபிமானியான பன்னீர்செல்வம் 705 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார்.

துணைத் தலைவர் கமாலுதீன் 370 வாக்குப் பெற்றார்.

அதிமுக கட்சியை சேர்ந்த ஜெயசீலன் செயலராக தேர்ந்தெடுத்தனர். இவர் ஏற்கனவே செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிட தக்கது.

இணை செயலராக சதீஸ்குமார்

2017-2018 ஆண்டிற்கான நிர்வாகிகளை வாக்களித்து தேர்வு செய்தனர்.

தேர்தலில் வாக்களித்தவர்கள் மொத்தம் – . 902

ராஜசேகரன், பன்னீர்செல்வம், ரவி, கார்த்திகேயன், பத்மாராமநாதன், குமரேசன், பொன்னுசாமி, ராமச்சந்திரன், சுரேந்திரன், கீதா , சிவகுமார், காமராஜ், பாலசுப்ரமணியன், தர்மேந்திரன், கனிமொழி உள்ளிட்ட 15 நபர்கள் செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் 13 ஓட்டுகள் செல்லாத ஓட்டு பதிவு செய்திருக்கிறார்கள்.

தலைவராக – தி.மு.க. வை  சேர்ந்தவரையும், செயலாளராக அ.தி.மு.க. சேர்ந்தவரையும்  தேர்ந்தெடுப்பதிலிருந்து திருச்சி வழக்கறிஞர் சங்கத்தை பொறுத்தவரையில் கட்சி  பார்க்காமல் வழக்கறிஞர் சங்கத்திற்கு யார் தேவை என்பதை முடிவு செய்து வாக்களித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

புதிய நிர்வாகிகள் திருச்சி நீதிமன்றத்தில் சமீபகாலமாக சுற்றி வரும் சர்ச்சைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார்கள் என்று அனைத்து வழக்கறிஞர்களின் எதிர்பார்பாக இருக்கிறது.

 

 

Leave A Reply

Your email address will not be published.