பவர் பாண்டி – ரியல் சினிமா விமர்சனம் ! Mani Seshan

0 45

பவர் பாண்டி.

”சமீபத்தில் ஒத்தக்காய் செருப்படி” எனும் பொருள் குறித்து எழுதியிருந்தேன்.இந்தப்படமும் அப்படியான ஒரு ஒத்தக்காயின் கதைதான்.

ஜீன்சும் டிஷர்ட்டும் என 60 வயதிதிற்கும் மேலும் கலக்கும் ஒரு கேரக்டர் ராஜ்கிரன். ரிட்டையர் ஆன சினிமா ஸ்டெண்ட் மாஸ்டர்.மகன் வீட்டில் மருமகள் பேரக்குழந்தைகளுடன் மனைவியை இழந்த பிறகு பொழுதை போக்குகிறார். ( அந்த பெண் குழந்தை கொள்ளை அழகு) சில சில வம்பிழுப்புகள்,உபகாரம் என செய்யப்போய் உபத்திரவமாகிவிடும் சம்பவங்களால் ( மஞ்சப்பை ஞாபகம் வருகிறது) பக்கத்துவீட்டு விடலையிடம் ரெண்டு டின் பீரை வாங்கி ஊற்றிக்கொண்டு மகனிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார்.

அதன் பின் கொஞ்சம் பிளாஷ் பேக். எங்கு போவது என இலக்கில்லாமல் (25 லட்சரூபாயுடன்) புல்லட்டில் பயணிக்கும் அவருக்கு வழியில் சந்திக்கும் வீடைவிட்டு ஓடிவந்த சில பெரிசுகள் ஒரு இடத்தில் பழக்கமாகி முதல் காதலியை பார்க்கும் முடிவை எடுக்கிறார். அதற்கு உதவியாக அந்த பெரிசுக முகநூல் மூலம் அந்த முதல் காதலியை (ரேவதி) காட்டிக்கொடுக்கிறார்கள் (60 வயசிலும் அப்பா பெயரை கூட போட்டுக்கொண்டு யாரும் முகநூலில் இருக்கிறார்களா) ஹைத்ராபாத் நோக்கி பயணமாகி முதல் காதலியை சந்திக்கிறார்.

அவரும் கணவனை இழ்ந்த ஒத்தைகாயாய் இருக்கிறார். ரெண்டு நாள் சுற்றிவருகிறார்கள்.போர்வைக்குள் புகுந்து இரவு முகநூல் சாட் செய்வதும், ஷாப்பிங் செய்வதும், இன்னும் நான் உன் மனசில் நான் இருக்கிறேனா ? என கேட்பதும், இதுவரையில் திரையில் சொல்லாத, பேசப்படாத பொருள் ரசிக்கும் படியாக இருக்கிறது.ரேவதி தனது மகள் டிடி யிடம் முதல் காதலை பற்றி சகஜமாக பேசுவதும் அதற்கு அவர் பாஸிட்டிவான கருத்தை சொல்வதும் சூப்பர். ஏம்மா? 28 வயசுல விதவையானவங்களையே மறுதிருமணம் செய்யச் சொல்லி சொல்கிறோம், 60 வயசுல தனியா இருக்கறவங்க சேர்ந்து வழ்வதில் என்ன தப்பும்மா? என கேட்டு நம்மையும், யோசிக்க வைக்கிறார். ராஜ்கிரன் மகனாக வரும் பிரசன்னா அருமையாக நடிக்கிறார்.அழகாகவும் இருக்கிறார்.

அப்பா கோவித்துக்கொண்டு போய்விட்டார் என அறிந்ததும் நம்மால் தானே இப்படி ஆச்சு என்கிற பதைப்பும், மனைவியின் மடியில் தலைவைத்து அழும் குழந்தைத்தனமும் நெஞ்சை கொள்ளைகொள்கிறது. இப்படியான அருமை புத்திரன் , மருமகளை கொண்ட இந்த பெருசு ஒன்னும் இல்லாததற்கே இப்படியான கோபம் கொண்டு வெளியேறுகிறதே எனும் என்னம் தோன்றாமல் இல்லை. அங்குதான் இயக்குனர் இருக்கிறார்.

மகனோ மருமகளோ கொடுமை படுத்துவதாக காட்டியிருக்க முடியும், ஆனால் அப்படி காட்டாமல் சாதாரண பிரச்சனைகளால் , இயல்பிலேயே ஜாலியாக இருக்க நினைக்கும் ஒரு பெருசு என்பதாக கேரக்டரை மனசில் பதிய வைத்திருக்கிறார்.பண்பாட்டு எல்லை மீற தயக்கம் காட்டும் திரைக்கதைகளை தமிழ் திரைஉலகம் ஏராளமாக கண்டு விட்டது.கடைசி வரைக்கும் சொல்லிவிடுவது மாதிரியே வந்து இறுதி காட்சியில் கலாச்சாரம் , பண்பாடு, என அட்வைஸ் சொல்லும் திரைக்கதையாக இல்லாமல் மகன், மருமகள், பேரப்பிள்ளைகள், வந்ததால் அவர்களுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் ஒரு பெருசாக ராஜ்கிரனை காட்டுவது பிடித்திருக்கிறது. கடைசி காட்சி அழகு.

ராஜ்கிரன் புறப்பட தயாராக புல்லட்டில் உட்கார்ந்திருக்க ரேவதி அருகில் நிற்க,. ரேவாதியின் மகள் டிடி சற்றுத்தள்ளி பிளாட்பார்ம்ல் கைகட்டி அவர்கள் தனிமைக்கு இடையூறில்லாமல் நிற்க, மகனும் மருமகளும் , பேரக்குழந்தைகளும், காரில் சற்று தள்ளி காத்திருக்க, ( அவர்கள் இருவரும் பேசுவதை பிரசன்னா கார் கண்ணாடி மூலம் ரசிப்பது டச்) .சிக்னலில் நிற்கும் ராஜ்கிரன் திரும்பாமலேயே கையை மட்டும் தூக்கி டாடா காட்ட அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருக்கும் ரேவதி புன்னகையுடன் டாடா காட்டும் காட்சி நிறைய சொல்கிறது.

பாத்ரூம் கண்ணாடியில் தன்னை ட்தானே பாரத்துக்கொண்டால் ஓடோபோன் பொம்மை மாதிரி இருக்கும் தோற்றம் வந்துவிட்ட வயோகத்திலும் தன்னையே ரசித்துக்கொள்வதும், காதலியை பார்க்கப் போவதற்கு முன் பரபரப்பாக இருப்பதும்.புரபைல் செல்பிக்காக மெனக்கெடுவதும் சொல்லவேண்டிய கதைதான். வயசு ஆவதால் எது குறைந்து விடுகிறது. முகநூல் ”பவர்பாண்டிகள் “ பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள். நான் மகிழ்ந்தேன்.

• தனுஷ் பிளாஷ் பேக் காட்சிகள் தேவையே இல்லை.து இல்லாமலும் கதை புரிந்திருக்கும்.

• ஹைத்ராபாத் போகும் வழியில் தாபாவில் தமிழ் பேப்பர் கிடைப்பதும் அதில் காணவில்லை விளம்பரம் இருப்பதும் நெருடல்.

• வேலையில் இருக்கும்நண்பணின் அம்மா போன் செய்யும் போது வேலையா இருக்கேம்மா அப்புறம் பேசு என சொல்லி கட் செய்யும் நண்பனிடம் – டேய் அம்மா அப்பா போன் பண்ணா பேசுங்கடா , அவங்க என்னடா எதிர்பார்க்கிறாங்க சாப்டீங்களா? மாத்திரை சாப்டீங்களா? என்று ஒரு விசாரிப்பை தாண்டா. என நொந்து சொல்லும் பிரசன்னா டயலாக் சபாஷ் போட வைக்கிறது.

• ரஜ்கிரன் பக்கத்துவீட்டு விடலை நட்பு ஒரு கவிதை.

. நாம அவங்களோட வாழறோம் நம்ம வாழ்க்கையையா வாழறோம் என்று ராஜ்கிரண் கேட்கும் கேள்வி க்கு எந்த பெரிசும் இல்லை என்றுதான் பதில் சொல்லும்

( பி-கு காட்சி
முடிந்து வெளியில் வரும் போது இதுவரை நேரில் பார்த்திராத ஒரு முகநூல் தோழியை பார்த்தேன். நீங்க…. அவங்கதானே! என கேட்க நினைத்தேன். எப்படி கேட்பது என யோசித்துக் கொண்டே அருகில் சற்று தள்ளி அவருடன் இருந்தவரிடம் சார் அவங்க …..தானே1 என்றேன். ஆமாம் நீங்க என்றார். நான் அவங்க பேஸ்புக் பிரண்ட் பேரு மணிசேஷன் என்றேன். அப்புறம் அருகில் வந்த அந்த அம்மணியிடன் அறிமுகப்படுத்திக் கொண்டேன். ம்னைவியை அறிமுகப்படுத்தினேன். சட்டென திரைக்காட்சிகள் நினைவில் வந்து பிளாஷ் அடிக்க அறிமுகப்படுத்திக்கொள்வதற்கான நேரம் இதுவல்லவோ என குழப்பம் எழ விரைந்து விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன்

Mani Seshan

https://www.facebook.com/mani.seshan.7

Leave A Reply

Your email address will not be published.