தினகரனை விரட்டி விட்டு கட்சியை கைப்பற்ற துடிக்கும் மன்னார்குடி !

0 18

தலைப்பே குழப்பமா இருக்கே என்று நீங்கள் நினைக்கலாம் !. மறைக்கப்பட்ட பழைய சம்பவத்தையும் தற்போது நடக்கும் சம்பவத்தையும் இணைத்துப் பார்த்தால் இந்தத் தலைப்பின் அர்த்தம் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் விரிவான பதிவு பொறுமையாக படிக்கவும். ..

இப்ப தேர்தல் ரத்தானதால் தினகரன் அ.தி.மு.க.வுக்கு லாபம், தி.மு.க.வுக்கு நஷ்டம் என்பதுதான் நிஜம்.

தினகரனை பொறுத்தவரை, இந்தத் தேர்தல் ரிசல்ட் என்பது கட்சியைக் காப்பாற்றப் பயன்படும் மிகப்பெரிய ஆயுதம். தி.மு.க. ஜெயிச்சு, தினகரன் இரண்டாவது இடத்துக்கு வந்தாலே போதும்னுதான் ஆரம்பத்தில் நினைத்தார். ஆனால் பணப்பட்டுவாடாவை கம்ப்ளீட்டா முடித்த பிறகு காற்று தினகரன் பக்கம் பலமா அடிக்க ஆரம்பித்தது என்பது ஆர்.கே. நகர் பகுதியில் வேலை பார்த்த அரசியல் தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆரம்பத்தில் ஆர்.கே. நகரில் வேட்டி-சேலைன்னு கொடுத்துக்கொண்டிருந்த தி.மு.க.வினர் கூட, கடைசி நேரத்தில் ரூபாய் கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆனால் ஓ. பன்னீர் குரூப் கடைசி வரைக்கும் காசை கண்ணுல கூட காட்டல. ஏன்னா பி.ஜே.பி. கொடுத்த வாக்குறுதி.

கடந்த 10-ஆம் தேதி மாலை, அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், “”தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை, மத்திய அரசின் சதித்திட்டம் இது” என பி.ஜே.பி.யை நோக்கி நேரடியாகக் குற்றம் சாட்ட ஆரம்பித்த தினகரன், “தேர்தல் வாக்குறுதிகளை ஆர்.கே.நகரில் இப்பொழுதே நிறைவேற்ற பணிகளைத் தொடங்குவோம்’ எனச்சொல்லி நடத்தப்போகும் ஓ.பி.எஸ். மற்றும் பி.ஜே.பிக்கு  பெரிய அதிர்ச்சி குண்டை அள்ளி வீசினார். இது மன்னார்குடி கும்பலுக்கு அதிர்ச்சியளித்தது.

து.பொ.செ. ஆனபிறகு, கட்சியின் முக்கியப் புள்ளிகளையும், எம்.எல்.ஏ.க்களையும், அமைச்சர்களையும், நட்சத்திரப் பேச்சாளர்களையும் அழைத்துப் பேசி உண்மை நிலவரத்தை விளக்கி அவர்களை தன் ஆதரவாளர்காக மாற்றி அதில் வெற்றியும் பெற்றார் தினகரன்.

தினகரனின் இந்த அதிரடி அரசியல், தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.     குறிப்பாக ஓ.பி.எஸ், திவாகரன், நடராஜனக்கு பெரிய அடியாக இருந்தது.  இவரை இப்படியே விட்டால் நாம் எல்லோருக்கும் ஆபத்து நினைக்கத் தோன்றினார்கள்.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததும் தன்னைத் தானே வேட்பாளராக அறிவித்துக்கொண்ட தினகரன், “முதல்வராகும் ஆசை இல்லை’ என்ற அசாதாரணமான அறிவிப்பை சர்வசாதாரணமாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்.

தேர்தல் கமிஷன் கைங்கரியத்தால் இரட்டை இலை முடக்கப்படும் என்பதைப் பன்னீர் கோஷ்டி உறுதியாக நம்பியது.

தினகரனோ அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களோ, அமைச்சர்களோ தொகுதிக்குள் நுழையவே முடியாது என்று ஆரம்பத்தில் இருந்த நிலைமை மாறத்தொடங்கியது. இதற்கிடையே எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவரும் ஃபெரா வழக்கில் தினகரன் தினமும் ஆஜராக வேண்டும் என கறார் காட்டினார் நீதிபதி மலர்மதி. உயர்நீதிமன்றத்தை நாடி அதிலிருந்தும் விலக்குப் பெற்றார். “இடைத்தேர்தல் ரத்தானாலும் கலங்காமல், இரட்டை இலையை மீட்போம்’ என்கிறார் தினகரன்.

அண்மைக் காலத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் சிரித்த முகத்துடன் பதில் கொடுக்கும் அரசியல் பிரமுகர் டி.டி.வி. தினகரன்தான். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தொடங்கி, ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வரை அத்தனையையும் அக்மார்க் அ.தி.மு.க. பாணியில் கச்சிதமாகவே நிறைவேற்றியுள்ளார்.

மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முழுமையான ஆதரவை ஓ.பி.எஸ். அணிக்கும், கடுமையான நெருக்கடியைத் தினகரன் தரப்புக்கும் தருகிறது. மோடி அரசை நேரடியாக எதிர்க்காமலேயே நெருக்கடிகள் அனைத்தையும் மாநில அரசின் அதிகாரம் மூலம் சமாளிக்கிறார் தினகரன்.

ஜெயலலிதா மரணம் தொடர்பா மக்களுக்கு இருக்கும் சந்தேகமும் வெறுப்பும் தினகரன் மற்றும் மன்னார்குடி வகையரா பக்கம் இருக்கிறது என்பது நல்லாவே தெரியும். அதனால் தான் இதே தினகரன் தான் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், அதுவும் மத்திய அரசு தலைமையில் விசாரணை நடக்க வேண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இது தான் ஓ.பி.எஸ். குரூப்புக்கும், மன்னார்குடி வகையராவும் பிஜேபிக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது என்னடா புதுக்கதையா இருக்கு என்று நீங்கள் குழம்பி போய் இருக்கலாம். கொஞ்சம் ரீ லைவ் பண்ணலாம்…

எம்.ஜி.ஆர். இறந்துவிட்டநிலையில், அப்போது கட்சியின் முக்கிய அடையாளமாக இருந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வண்டியில் ஏறினார். ஆனால் கட்சியில் அதிகாரப் பசியோடு இருந்த சிலரின் தூண்டுதலால், எம்.ஜி.ஆரின் உறவினர்களைக்கொண்டே கீழே இறக்கிவிடப்பட்டார். அப்போது ஜானகியின் உறவினர்கள் ஜெயலலிதாவைக் கீழே தள்ளிவிட்டார்கள். எம்.ஜி.ஆரால் சலுகைகள் பல பெற்ற ஜேப்பியார் ஜெயலலிதாவின் முதுகில் அடித்தார்.

இதைக் கண்டு பொறுக்காத இளைஞர் ஒருவர், ஆத்திரமும் அழுகையுமாக வேகமாக ஓடிச்சென்று ‘எங்க அம்மாவை தள்ளிவிட நீ யார்?’ என்று கேட்டுக்கொண்டே, ஜேப்பியாரின் கையைக் கடித்தார் அந்த இளைஞர். அவரைப் பார்த்து ஜெயலலிதாவுக்கு ஆறுதலாகவும் தெம்பாகவும் இருந்தது.

அன்று ஜெயலலிதாவை காப்பாற்றிய அந்த இளைஞர்தான் மன்னார் குடி கும்பலில் ஜெ.வினால் அரசியலுக்கு அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன், அதுவும் தேர்தலில் நின்று வெற்றிபெற்று எம்.பி. ஆனவர். மீண்டும் தேர்தலில் நின்ற போது தோற்கடிக்கப்பட்டாலும் அவரைக் கட்சியின் சார்பில் எம்.பியாக ஆக்கினார். கூடவே கட்சியின் பொருளாளராகவும் மாற்றினார்.

தினகரன் இருந்த 9 வருடத்தில் அதிமுக வில் மன்னார்குடி கும்பல் சசிகலா கம்பெனி கட்சிக்குள் மூக்கு நுழைக்க முடியவில்லை. அரசு அதிகாரிகளிடம் தினகரனை மீறி அதிகாரம் காட்டமுடியவில்லை. அதானல் மன்னார்குடி கும்பல் எல்லா சிபாரிசுகளையும் சசிகலாவிடம் கொண்டு செல்ல வேண்டிய நிலை.

நடராஜன், திவாகரன், இளவரசி, சசிகலா மற்றும் இவர்கள் அத்தனை நடவடிக்கைகளையும் துல்லியமாக தெரிந்த தினகரனை ஜெ. தன் கைக்குள் வைத்துக்கொண்டார்.

தினகரனின் இந்த வளர்ச்சியை சசிகலாவினாலே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் தினகரன் அரசியல் வேறு குடும்பம் வேறு என்று தனித்தனியே பிரித்து பார்த்தன் விளைவு ஜெ.வின் நெருக்கமான வட்டத்திற்குக் கொண்டு சென்றது. ஆனால் சசிகலாவின் வெறுப்பு மற்றும் கோப பார்வையில் சிக்கினார்.

இதனாலே தினகரனை எப்படியாவது ஜெ.விடம் இருந்து பிரிப்பது என சசிகலாவும் அப்போது ஜெ.வுக்கு வழக்கறிஞராக இருந்த ஜோதி ஆகியோர் இணைந்த சதியில் தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதை உணர்ந்த தினகரன் சசிகலாவின் தூண்டுதலால் தான் தான் நீக்கப்பட்டோம் என்பதை உணர்ந்து தான் ஒதுங்கியிருந்தார். அன்றைக்கு வெளியே போனவர் மீண்டும் சசிகலா அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.வை பார்ப்பதற்காக அழைத்த போது மீண்டும் வந்தார். அதுவரை போயஸ்கார்டன் பக்கம் வரவே இல்லை.

கடந்த 8 வருடம் ஜெ.வின் அத்தனை அசைவுகளும் சசிகலாவும் அவர்கள் குடும்பத்தினரும் தான் இருந்தனர். இதனால் தான் ஜெ. கடைசி நேரத்தில் சசிகலாவிட அரசு அதிகாரளை உடன் வைத்திருந்தார். அவர்களைத் தான் எல்லாப் பேச்சு வார்த்தைக்கும் கொண்டு சென்றார். இந்த நிலையில் ஜெ. உடல் நிலை சரியில்லாத நேரத்தில் மும்பையில் உள்ள தனது நண்பரிடம்… சசிகலா கட்சியை காப்பாற்ற முடியாது. அவளுக்குத் திறமை பத்தாது அவளை ஏமாற்றிடுவாங்க, தினகரனைத் தான் வர சொல்லியிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். தினகரனைப் பார்க்க வேண்டும் என்று ஜெ. இரண்டு முறைக்கு மேல் கட்டாயப்படுத்திய பிறகே தினகரன் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

வேறு வழியில்லாமல் தான் இந்த து.பொதுச் செயலாளர் பதவி. அப்போதும் திவாகரன், வெங்கடேஷன், நடராஜன் மறுத்த போதும் சிறை செல்லும் முன்பு சசிகலா இந்த நெருக்கடி நிலையில்…உங்க யாரைலையும் கட்சியை நடத்த முடியாது. தினகரன் சரியாக இருப்பார் என்று சொல்லியிருக்கிறார்.

து.பொ.செயலாளர் ஆன பின்பு தினகரன் டிவி பேட்டியில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள், பொறுப்பு கேட்க மாட்டார்கள். என்று பகிங்கரமாக அறிவித்தது மன்னார்குடி கும்பலுக்கு தினகரன் மீது இப்போது கோபம் பல மடங்கு உயர்ந்தது. இதன் பிறகு தான் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற ரீதியில் மன்னார்குடி கும்பல் – ஓ.பி.எஸ். இணைந்து நடத்திய அதிரடி திட்டம் தான் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் அதிரடிகள்.இதில் தினகரனை தவிர்த்துவிட்டு மன்னார்குடி கும்பல் மறைமுக ஆதரவோடு ஓ.பி.எஸ். தலை தூக்கினாலும் கட்சி சின்னத்தை திரும்பப் பெற்றாலும். ஆட்சி நிச்சயம் நிலைக்காது என்கிறார்கள்.

இன்னும் இரண்டு வருடம் கட்சியில் பல கட்ட போராட்டங்கள் நடந்தாலும் கட்சியை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டேன். தினகரன் விடாப்பிடியாக இருப்பதால் தான் சசிகலா பார்க்க பெங்களுர் சென்றிருக்கிறார்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி தான் திவாகரன் ‘‘நானோ எனது குடும்பத்தாரோ கட்சியிலோ அல்லது ஆட்சியிலோ தலையிட மாட்டோம். அதிமுகவின் இரு அணி தலைவர்களும் இணைந்து பேசி எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம்.’’ என திவாகரன் கடிதம் , அது நேரத்தில் சசிகலாவும் எந்த நேரத்திலும் தன்னுடைய பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்து தினகரன் விரட்டும் வைபவத்திற்கு  ஆரம்ப அரசியலாக இருப்பார் என்கிறார்கள்.

ஒரு வேளை இரண்டு அ.தி.மு.க. அணிகளும் இணைந்தாளும்  தினகரனின் விடாபிடியான அரசியல் நிலைபாட்டால் ஆட்சி கலையும் நிலைக்கு தள்ளப்படும்.

தினகரனின் ஜெ. பாணி அரசியல் தான் இப்போது தன் சொந்த குடும்பத்தினரால் அவருக்கு இந்த ஆபத்தில் முடிந்திருக்கிறது. ஆனாலும் அவருடைய அனுபவ அரசியலில் தன்னையும் கட்சியையும் எப்படியும் காப்பாற்றுவார் என்கிறார்கள் விவரம் அறிந்த அரசியல்வாதிகள்.

ஜாரேவ.

Leave A Reply

Your email address will not be published.