அந்த குடும்பத்தை நீக்கி விட்டு கட்சியை நடத்துவோம்-அமைச்சர்கள்

0 15

​தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை.
இந்த கூட்டத்தின் முடிவில் சசிகலா, தினகரன் உள்ளிட்ட ஒரு குடும்பத்தை ஒதுக்கி வைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக பரபரப்பு தகவல்.

இந்நிலையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.வளர்மதி, எம்பிக்கள் வைத்திலிங்கம், ப.குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்,

டிடிவி தினகரன் குடும்பத்தின் தலையீடு இல்லாமல்  கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவது பற்றி ஆலோசனை நடத்தினோம்.தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப டிடிவி தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு கட்சி பணியை தொடர முடிவு
தமிழக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள்,  தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக தொண்டர்களின் ஒட்டு மொத்த விருப்பமும் சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியையும் ஆட்சியையும் நடத்த வேண்டும் என்பதுதான்.

டி.டி.வி. தினகரன் குடும்பத்தைச் ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கட்சி வழிநடத்துவதற்கான குழு விரைவில் அறிவிக்கப்படும். ஒரு குடும்பம் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும்

இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
டி.டி.வி. தினகரனை அதிமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என முதல்வருடன் நடத்திய ஆலோசனைக்குப் பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
அதிமுகவை வழிநடத்த விரைவில் குழு அமைக்கப்படும்.

ஆனால் இதுவரை நடந்த அத்தனை அரசியல் நிகழ்வுகளுக்கு மீடியாக்களுக்கு என்ன பேட்டி கொடுக்கிறார்களோ அதற்கு நேர் எதிராக தான் அவர்களின் செயல்பாடுகள் இருந்திருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே !

 

Leave A Reply

Your email address will not be published.