திருச்சி சிறையில் ரவுடிகளுக்கு நீயா ? நானா ? கொலை வெறி தாக்குதல்

0 59

திருச்சி சிறையில் ரவுடிகளுக்கு நீயா ? நானா ? கொலை வெறி தாக்குதல்

 

திருச்சி மத்திய சிறையில் உள்ள, திருச்சியை சேர்ந்த ரவுடி நார்த் டி பாஸ்கர்,  இவன் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி முட்டை ரவி குரூப்பில் இருந்தவன். , 17ம் தேதி மாலை, சிறை வளாகத்தில், துரைசாமி உள்ளிட்ட, நான்கு கைதிகள் சேர்ந்து தாக்கினர். சிறை துறை போலீசார், பாஸ்கரை காப்பாற்றினர்.

இந்நிலையில், நேற்று காலை, பாஸ்கரின் கோஷ்டியில் உள்ள மற்றொரு ரவுடியான, ராமச்சந்திரன், சென்னையை சேர்ந்த கல்வெட்டு ரவி என்ற ரவுடியிடம், ‘பாஸ்கரை கொலை செய்ய ஏற்பாடு செய்கிறாயா’ என கேட்டு தகராறு செய்துள்ளான்.

அப்போது, கைகலப்பு ஏற்பட்டு, இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். சிறை துறையினர் இருவரையும் பிரித்துள்ளனர். இருவரையும், ஜெயிலர் அறையில் விசாரித்தபோதே, இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டு,

ஜெயிலர் அறையின் கண்ணாடி உடைந்துள்ளது. இதையடுத்து, ராமச்சந்திரன் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

சிறை துறையில் உள்ள சில அதிகாரிகளோ

இங்குள்ள கல்வெட்டு ரவி, பாஸ்கர், ராமச்சந்திரன், துரைசாமி மற்றும் அவர்கள் கோஷ்டியை சேர்ந்தவர்களை, தமிழகத்தின் தனித்தனி சிறைகளில் அடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், சிறையில் அமைதி நிலவும். இல்லாவிட்டால், இங்கு நடக்கும் கோஷ்டி மோதலில், நிச்சயம் சிலர் உயிர் இழக்கும் சூழல் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Leave A Reply

Your email address will not be published.