ஊருக்கே உபதேசம் செய்பவர்கள் இப்படிச் செய்யலாமா? – திருச்சி ஐயப்பன் கோவில்

0 338

ஊருக்கே உபதேசம் செய்பவர்கள் ஐயப்பன் கோவில் நிர்வாகம் இப்படிச் செய்யலாமா?

 

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில் என்பார்கள்.

திருச்சி ஐயப்பன் கோவில் பின்புறம்

திருச்சி ஐயப்பன் கோயிலுக்குள் ஒரு முறை போய் விட்டு வெளியே வருபவர்களுக்கு இறைபக்தி மட்டுமல்ல அன்றாட வாழ்வின் செயல்பாடுகளிலும் ஒரு ஒழுங்குமுறை ஏற்படும்.

அந்தளவுக்கு ஒவ்வொரு இடத்திலும் செயல்பாடுகளிலும் வணக்கமுறைகளிலும் ஆடை விஷயத்திலும் ஒரு நேர்த்தி தென்படும்.

யார் கண்பட்டதோ தெரியவில்லை.

தங்களின் கோயிலில் சேர்ந்த தென்னை மட்டை உள்ளிட்ட குப்பைகளை கோயிலின் பின் பக்கத்தில் ஓடும் உய்யக்கொண்டான் வாய்க்காலில் ( சாக்கடையில்) கொட்டி தீயை வைத்து விட்டார்கள்.

அந்த தீ அங்கிருந்த நன்கு வளர்ந்த மரங்களையும் எரித்துக் கரிக்கி விட்டது.

அங்கிருந்து கிளம்பிய புகை அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களையும் பள்ளி செல்லும் பிள்ளைகளையும் மூச்சடைக்க வைத்ததுடன் ஏற்கனவே தகித்துக் கொண்டிருக்கும் சுற்றுப்புறத்தையும் வெப்பமாக்கியது.

தீயினால் அழிக்கப்பட்ட கண்ணுக்குத் தெரியாமல் நீரிலும் நிலத்திலும் வாழும் பல்லுயிர்ச் சூழல் மீண்டும் உருவாக பல்லாண்டுகள் பிடிக்கும்.

 

ஊருக்கே உபதேசம் செய்பவர்கள் ஐயப்பன் கோவில் நிர்வாகம் இப்படிச் செய்யலாமா?

Shanu,

Trichy.

Leave A Reply

Your email address will not be published.