ஸ்மார்ட் ரேசன் கார்டை ஆக்டிவேட் செய்யனுமா ?

0 38

ஸ்மார்ட்கார்டை ஆக்டிவேட் செய்ய பயனுள்ள வழிகள்:
1. பொதுமக்களே தங்களின் ஸ்மார்ட்கார்டை மேம்படுத்தப்பட்ட TNePDS மொபைல் ஆப்பினை பயன்படுத்தி ஸ்மார்ட்கார்டை பெறுவதற்காக வழங்கப்பட்ட OTP-யினை ஸ்மார்ட் அட்டை செயல்படுத்துதல் மெனு சென்று உள்ளீடு செய்து ஆக்டிவேட் செய்யலாம்.

2. பொதுமக்களே www.tnpds.gov.in இணையதளத்தில் வலப்பக்கம் மேலே காணப்படும் பயனாளர் நுழைவு பகுதிக்கு சென்று வழங்கப்பட்ட OTP-யினை பயன்படுத்தி ஸ்மார்ட்கார்டை செயலாக்கம் செய்து கொள்ளலாம்.
3. பொது வினியோக சேவை மையம் எண் 1967(அ)1800-425-5901 தொடர்புகொண்டு குடும்ப அட்டை எண் தெரிவித்து தொலைந்து போன OTP-யினை பெற்று கொள்ளலாம்.
4. ஸ்மார்ட்கார்டை ஆக்டிவேட் செய்வதற்காக வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு(TSO) சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உங்கள் எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம்.
5. சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளிலும் ஸ்மார்ட்கார்டு ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

மேற்கூறிய எம்முறையை பயன்படுத்தி ஸ்மார்ட்கார்டு ஆக்டிவேட் செய்யப்பட்டாலும் சம்பந்தப்பட்ட ரேசன் கடைக்காரர் POS சாதனத்தை நிகழ்நிலையில் வைத்துள்ளபொழுது சர்வரில் இருந்து சாதனத்திற்கு தகவல் பரிமாற்றம் வெற்றிகரமாக நடக்கும் பின்னரே விற்பனை செய்ய முடியும்.
அவசியம் ஸ்மார்ட்கார்டு பெற்றவுடன் பழைய ரேசன் கார்டை சீல் வைத்து பெற்று கொள்ளுதல் அவசியம்.

கூடுதல் வசதியாக www.tnpds.gov.in இணையதளத்தில் வலப்பக்கம் மேலே காணப்படும் பயனாளர் நுழைவு பகுதிக்கு சென்று தங்களது ஸ்மார்ட்கார்டின் அனைத்து விவரங்களையும் புதுப்பித்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1. புதிய குடும்ப அட்டைதாரர்கள் www.tnpds.gov.in இணைய முகவரி சென்று ஸ்மார்ட் அட்டை விண்ணப்பம் சென்று விண்ணப்பித்து கொள்ளலாம்
2. குடும்ப அட்டை முடக்கத்திற்கு உள்ளானர்வர்கள் மற்றும் புதிய குடும்ப அட்டை கையில் வைத்துள்ளவர்கள் பழைய குடும்ப அட்டை பதிவு சென்று புதியதாய் விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும் உடன் பழைய ரேசன் கார்டை பதிவேற்றம் செய்தல் அவசியம்.

Leave A Reply

Your email address will not be published.