நீங்கள் ரயில் மற்றும் பஸ்சில் பயணம் செய்பவரா? எச்சரிக்கை மயக்க ஜுஸ் தம்பதிகள் !

0 22

நீங்கள் ரயில் மற்றும் பஸ்சில் பயணம் செய்பவரா?

எச்சரிக்கை மயக்க ஜுஸ் தம்பதிகள் !

எப்படி எல்லாம் திட்டம் போட்டு அப்பாவி மக்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செங்குந்தபுரத்தைச் சேர்ந்தவர் சாந்தலிங்கம். இவரது மனைவி தனலெட்சுமி (73), புற்று நோயால் பாதிக்கப்பட்டு சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் பாபு ரோட்டில் உள்ள ஜீ.வி.என் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த 17ம் தேதி தம்பதிகள் சிகிச்சைக்காக பஸ்சில் திருச்சி வந்தனர்.

மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெற்று, மீண்டும் சத்திரம் பஸ் நிலையம் வந்தனர். பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் ஜெயங்கொண்டம் புறப்பட்டனர்.

அப்போது உடன் ஏறிய பயணி ஒருவர், தம்பதிகளிடம் ஏபச்சு கொடுத்தார். சமயபுரம் கோயிலுக்கு சென்று வருவதாக கூறி, கோயில் பிரசாதம் வழங்கினார்.

தம்பதிகளும் அதனை பெற்றுக்கொண்டனர். பஸ் லால்குடி அருகே சென்றபோது அதே நபர் ஜுஸ் கொடுத்தார்.அதனை தம்பதிகள் வாங்கிக் குடித்தசிறிது நேரத்தில் இருவரும் மயங்கினர். பஸ் ஜெயங்கொண்டம் சென்றதும் கண்விழித்தபோது தம்பதிகள் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் கொள்ளை போனது தெரிந்தது.

அப்போதுதான் தங்களின் அருகிலிருந்தவர் கொடுத்தது மயக்க மருந்து கலந்த ஜுஸ் என்பதை உணர்ந்தனர்.

மர்ம நபர் 9 பவுன் தாலி செயின், 4 பவுன் வளையல், மோதிரம், செயின் என மொத்தம் பதினான்கரை 14 ½ பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

தம்பதிகள் மயக்க நிலையில் இருந்து முழுமையாக சுயநினைவுக்கு திரும்பாததால் அவர்களை சக பயணிகள் ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து சாந்தலிங்கம் திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் பயணங்களின்போதுதான், பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் , ஜுஸ் கொடுத்து நகை, பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்தது.

இப்போது பஸ் பயணத்திலும் பயணிகளை மயங்க வைத்து நகை கொள்ளை  நடந்திருப்பது பஸ் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.