ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தடகளபோட்டிகளில் சென்னை அணி சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது

0 40

ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள்  தடகளபோட்டிகளில் சென்னை அணி  சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது

28–வது மண்டலங்களுக்கு இடையே ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்களுக்கான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, ஐ.சி.எப்., சேலம், பாலக்காடு ஆகிய 6 மண்டலங்களை சேர்ந்த ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் 82 பேர் பங்கேற்றனர்.

 

திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்பட 19 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 2–வது நாளாக நேற்றும் போட்டிகள் விறு, விறுப்பாக நடந்தது.

 

இந்த போட்டியில் 122 புள்ளிகள் பெற்று சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 118 புள்ளிகள் பெற்று ஐ.சி.எப். அணி 2–ம் இடத்தையும், 86.5 புள்ளிகள் பெற்று திருச்சி அணி 3–ம் இடத்தையும் பெற்றது. தனிநபர் பிரிவில் 24 புள்ளிகளை பெற்று திருச்சி அணியை சேர்ந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் கோட்டீஸ்வரராவ் முதலிடத்தை பிடித்தார்.

 

போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் ஏ.கே.அகர்வால் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி, ரெயில்வே பாதுகாப்புபடை திருச்சி கோட்ட கமி‌ஷனர் சோமசேகர், உதவி கமி‌ஷனர் தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.