ஸ்ரீரங்கம் பெருமாள் கருடவானம் வீதியுலாவில் பெண் செயின் திருடர்கள் –

0 30

ஸ்ரீரங்கம் பெருமாள் கருடவானம் வீதியுலா

சிக்கிய பெண் செயின் திருடர்கள்

 

ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேர்திருவிழா நம்பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா திரளான பக்தர்கள் தரிசனம் செயின் பறிப்பு கும்பல் சிக்கியது

கோயில் திருவிழா மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகளை அணிந்து வரும் பெண்களின் கவனத்தை திசை திருப்பி அவர்கள் அணிந்துள்ள நகைகளை அபேஸ் செய்யும் பெண்கள் குழுவை சேர்ந்த 5 பேர் நேற்று ஸ்ரீரங்கத்தில் நடந்த கருடசேவை நிகழ்ச்சியில் சிக்கினர்.

அவர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். நகை திருடிய பெண்களிடம் அவர்கள் கைவரிசை காட்டிய இடங்கள் மற்றும் எவ்வளவு நகைகள் கொள்ளையடித்துள்ளனர் என துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கிய பெண்களின் பெயர்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

 

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழாவில் 4ம் நாளான நேற்று நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 17ம்தேதி துவங்கியது. 18ம் தேதி நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனத்திலும், 19ம் தேதி நம்பெருமாள் யாழி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 4ம் திருநாளான நேற்று மாலை நம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதைத்தொடர்ந்து காலை 4 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டார். 4.15 மணிக்கு வாகன மண்டபத்தை அடைந்தார்.

வாகன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.11 மணிக்கு வழிநடை உபயங்கள் கண்டருளி ஆரிய வைஸ்யாள் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை 6 மணிக்கு கருட வாகனத்தில் புறப்பட்ட நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையை அடைந்தார்.

7ம் திருநாளான 23ம்தேதி மாலை நம்பெருமாள் நெல் அளவு கண்டருளுகிறார். 9ம் திருநாளான 25ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.