சட்ட கமி‌ஷன் பரிந்துரை நகலை எரித்த திருச்சி வழக்கறிஞர்கள்

0 25

சட்ட கமி‌ஷன் பரிந்துரை நகலை எரித்த திருச்சி  வழக்கறிஞர்கள்

 

வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்திய கோர்ட்டுகளில் ஆஜர் ஆகி வாதாட அனுமதி அளிப்பது, வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நீதிபதிகளுக்கு அதிகாரம் அளிப்பது என்பது உள்ளிட்ட சில சட்ட திருத்தங்களை தேசிய கட்ட கமி‌ஷன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளது. வழக்கறிஞர்களின் நலனிற்கு எதிராக உள்ள இந்த சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என கோரி இந்திய பார் கவுன்சில் வேண்டுகோள் படி தமிழகத்தில் ஏப்ரல் 21 மற்றும் 22–ந்தேதியில் வழக்கறிஞர்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் திருச்சியில் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டு முன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசீலன், துணை தலைவர் கமால்தீன், இணை செயலாளர் சதீஷ்குமார், சகாபுதீன், கோவிந்தராஜன், பாலசுப்பிரமணியன், முத்துக்குமார் உள்பட மூத்த வழக்கறிஞர்கள், குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேந்திரகுமார் உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோ‌ஷம் போட்டனர். பின்னர் வழக்கறிஞர்கள் நலனிற்கு எதிராக சட்ட கமி‌ஷன் அனுப்பி உள்ள பரிந்துரை நகலுக்கு தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.