3 வயது சிறுவனை பலி எடுத்த மாத்தூர் எம்.ஐ.டி பொறியியல் கல்லூரி பேருந்து !

0 31

3 வயது சிறுவனை பலி எடுத்த மாத்தூர் எம்.ஐ.டி பொறியியல் கல்லூரி பேருந்து !  

திருச்சியில், M.I.T. கல்லூரி பஸ் மொபட் மீது மோதியது. மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுவன் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி தந்தை கண்முன்னே பரிதாபமாக இறந்தான்.

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் உஸ்மான் அலி தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 27). இவருடைய மனைவி அழகுமீனா. இவர்களுடைய மகன் ஆகாஷ் கண்ணா(வயது 3). அருண்குமார் திருச்சி ஆர்.எம்.எஸ். காலனியில் உள்ள ஒரு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். அழகுமீனா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ‘கால் சென்டரில்’ வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை கடையில் இட்லி மாவு வாங்குவதற்காக அருண்குமார் தனது மகன் ஆகாஷ் கண்ணா மற்றும் சகோதரியின் மகன் சிவபிரசாத்(5) ஆகியோரை அழைத்து கொண்டு ஒரு மொபட்டில் சென்றார். திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள ஒரு கடையில் மாவு பாக்கெட் வாங்கி விட்டு, மீண்டும் வீடு திரும்புவதற்காக காலை 8.50 மணியளவில் மொபட்டில் முன்புறம் ஆகாஷ் கண்ணாவை ஏற்றிக்கொண்டும், பின்னால் சிவபிரசாத்தை அமர வைத்துக்கொண்டும் அருண்குமார் மொபட்டை ஓட்டினார்.

அப்போது திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து வந்த, மாத்தூர் எம்.ஐ.டி கல்லூரி பேருந்து , அருண்குமார் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. இதில் அருண்குமாரும், சிவபிரசாத்தும் மொபட்டில் இருந்து வலது புறமாக கீழே விழுந்தனர்.

ஆனால் மொபட்டில் முன்னால் நின்று கொண்டிருந்த ஆகாஷ் கண்ணா இடது புறமாக சாலையில் தூக்கி வீசப்பட்டான். அப்போது அந்த பஸ்சின் பின்பக்க சக்கரம் ஆகாஷ்கண்ணாவின் தலை மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் ஆகாஷ்கண்ணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். அருண்குமாரும், சிவபிரசாத்தும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

தன் கண்முன்னே தலை நசுங்கி இறந்த ஆகாஷ்கண்ணாவின் உடலை பார்த்து அருண்குமார் கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. இது குறித்து தகவல் அறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுலோச்சனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆகாஷ் கண்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்தப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

கடந்த வாரத்தில்

இதே போன்று ராமகிருஷ்ண பொறியல் கல்லூரியின் பேருந்தை அதன் டிரைவர் போதையில் ஓட்டினதை பொது மக்கள் விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

அந்த செய்தியின் லிங் இதோ

திருச்சியில் நம்பர் 1 கல்லூரியாக இருந்தால் மட்டும் போதுமா ? குடிகார டிரைவர் பண்ணின அட்டகாசம் !

 

 

Leave A Reply

Your email address will not be published.