பள்ளி மாணவனை காவு வாங்கிய அனுமதி இன்றி கட்டப்பட்ட நீச்சல் குளம் ! ( படங்கள் )

0 25

பள்ளி மாணவனை காவு வாங்கிய அனுமதி இன்றி கட்டப்பட்ட   நீச்சல் குளம் !

திருச்சி சொகுசு விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்த மாணவர் ஒருவர், நீரில் மூழ்கிப் பலியானார். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், சொகுசு விடுதிமீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இறந்து போன A.K.K.V. பள்ளி மாணவன்

திருச்சி வயலூரில் உள்ளது முல்லை ரிஸார்ட். இந்தச் சொகுசு விடுதியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில், மாணவர்கள் கட்டணம் செலுத்திக் குளித்துவிட்டுப் போவது வழக்கம். ஒரு மணி நேரத்துக்கு, பெரியவர்களுக்கு 100 ரூபாயும் சிறுவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது, கோடை விடுமுறை என்பதாலும், வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதாலும், 15 பேர் குளிக்கும் இந்த நீச்சல் குளத்துக்கு, குளிப்பவர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக வந்துள்ளது.

அந்த சர்ச்சைக்குரிய குளம்

 

வெளிதோற்ற முகப்பு
இப்படி தான் குதித்து குளிக்கிறார்கள்
குறைந்தது 15 குளிக்கலாம்.
திருச்சியின் புறநகரில் விவசாய நிலங்களுக்கு நடுவே உள்ள கட்டிடங்கள்
உணவு விடுதியின் குடிகள்

 

இந்நிலையில், திருச்சி பால்பண்ணை அருகிலுள்ள மகாலட்சுமி நகரைச் சேர்ந்த முஸ்தபா என்பவரின் மகன், எட்டாம் வகுப்பு மாணவன் அபுதாகீர், தன் நண்பர்களான சல்மான், நிஜாம் ஆகியோருடன் நீச்சல் குளத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, நீச்சல் குளத்தில் 40 பேர் குளித்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் இவர்களும் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தனர். உற்சாகமாகக் குளித்த அவர்களில், அபுதாகீரை மட்டும் காணவில்லை. அவனைத் தேடிய சல்மானும் நிஜாமும், இதுகுறித்து அங்குள்ளவர்களிடம் கூறியுள்ளனர்.

 

அடுத்து, குளத்தின் நீரை வெளியேற்றிவிட்டு மாணவனைத் தேட ஆரம்பித்தனர். இறுதியில், ஏழு அடி உயரம்கொண்ட அந்த நீச்சல் குளத்தின் அடியில், அபுதாகீர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், முல்லை ரிசார்ட் முன்பு திரண்டனர். குளத்தில் குளிப்பவர்களுக்குப் பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் இல்லை என்றும், ஏழு அடி ஆழம் உள்ள நீச்சல் குளத்தில், நீச்சல் தெரியாதவர்கள் பயன்படுத்தக்கூடிய சாதனங்கள் இல்லை என்றும், பாதுகாப்பில்லாத நீச்சல் குளத்தால் அப்பாவிச் சிறுவனின் உயிர் போய்விட்டது என்றும் குற்றம் சாட்டி, ரிசார்ட்மீதும், தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், அவர்களைக் கலைத்தனர். ஜீயபுரம் டி.எஸ்.பி சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீஸார் விசாரணை விடுதியின் உரிமையாளர் சிவபாலகுரு, மேலாளர் கணேசலிங்கம் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

இது குறித்து த.மா.கா. விவசாய பிரிவை சேர்ந்த ராஜேந்திரன் நம்மிடம் அனுமதியின்றி செயல்படும் இந்த சொகுசு ரிசாட்டை நிரந்தரமாக சீல் வைத்து  மூடக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கடந்த மாதம் புகார் செய்தும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வில்லை தற்போது  ஒரு உயிர் பறிபோய் விட்டது. என்றார்.  இனியாவது விழித்துக்கொள்ளுமா ?

 

விசாரணை அதிகாரியிடம் நாம் விசாரித்த போது.. இது இங்கே உள்ள கட்டிடங்கள் எதுக்கும் முறையான அனுமதி வாங்கி கட்டவில்லை. நீச்சல் குளத்திற்கு தண்ணீரை மாற்றாமல் பாசி படர்ந்து கிடக்கிறது.  இந்த நீச்சல் குளத்தில் குளிப்பவர்களை கண்காணிக்க அனுபவம் வாய்ந்த நீச்சல் வீரர் இருக்க வேண்டும். விசாரணை முடிந்தவுடன் சீல் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.