கேரளா கிளி கிடைக்குமா ? அலறிய திருச்சி விடுதி ஊழியர்கள் !

0 60

கேரளா கிளி கிடைக்குமா ? திருச்சி போலிஸ் என மிரட்டி ஆசாமி கைது !

 

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சுபா ஓட்டலுக்கு இரவு டிப்-டாப் உடை அணிந்த ஆசாமி ஒருவர் வேகமாக விரைப்பாக நடந்து சென்றார். அவர் அங்கு பணியில் இருந்த விடுதி ஊழியர்களிடம் கேரளா கிளி கிடைக்குமா ? ஒரு கண்ணை சிமிட்டியிருக்கிறார். அதற்கு அவரிடம், விடுதி ஊழியர்கள்அவசர அவசரமாக அலறி போய் சார் து அதெல்லாம் கிடையாது, நீங்க தப்பா வந்திருக்கீங்க  என்று கூறி உள்ளனர்.

கேரளா கிளி கேட்டவர் …

உடனே அவர்,அசல்டாக.. என்னங்க எங்கிட்டையே ஏமாத்திரியா எனக்கு இந்த ஓட்டல பத்தி தெரியாதுன்னு நினைக்கிறயா என்னை யாருன்னு நினைச்ச  நான் தான் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறேன். எனக்கே கிளி இல்லை என்கிறீர்களா?. விடுதியில் யாருக்கெல்லாம் அறை கொடுத்து இருக்கிறீர்கள் என்று சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். எல்லா ரூமை பார்த்துவிட்டு செல்கிறேன் உள்ளே நுழைந்தவரை சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு சென்று, அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கருமண்டபத்தை சேர்ந்த சுதாகர்(வயது 30) என்பதும், ஓட்டலில் வேலை பார்க்கும் இவர் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.