திருச்சிக்கு பெருமை சேர்த்த செவாலியர் நடிகர் அலெக்ஸ் – 6 ஆண்டு மலர் அஞ்சலி !

0 33

திருச்சிக்கு பெருமை சேர்த்த செவாலியர் அலெக்ஸ்  6 ஆண்டு மலர் அஞ்சலி ! 

திருச்சி துரைசாமிபுரத்தைச்சேர்ந்த அலெக்ஸ், ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்தார். பின்னர் சினிமா, மேஜிக்என்று பிரபலம் ஆகிவிட்டார். வள்ளி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அலெக்ஸ், மிட்டாமிராசு, கோவில்பட்டிவீரலெட்சுமி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வில்லன், குணசித்தர நடிகர் என்று மாறுபட்ட வேடங்களில்நடித்த அலெக்ஸ் தமிழக அரசின் சிறந்த வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் விருது பெற்றுள்ளார்.

நடிகர் அலெக்ஸ்  திருச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் மேஜிக் நிகழ்ச்சியைநடத்தினார். இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

மேலும் மனதை அறிதல், மனோவசியம் கலையை 12 மணி நேரம் பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து நடத்திசாதனை புரிந்ததற்காகவும், குழந்தைகள் தின விழாவில் 6,000 மாணவர்கள் முன்னிலையில் 8 மணிநேரம் மேஜிக்நடத்தியதற்காகவும் அலெக்ஸ் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார்.

இலங்கை திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 600 டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் மனதைஅறிதல் மற்றும் மேஜிக் பற்றி விளக்கினார். புதிதாக அவர் கண்டுபிடித்த மேஜிக்குகளையும் அவர் நிகழ்த்திக்காட்டினார்.

இவற்றைப் பாராட்டி இலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் அலெக்ஸுக்கு 2004ம் ஆண்டுக்கான ஆல்பிரட்நோபல் பரிசு வழங்கியது. அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

நடிப்பு, மேஜிக் மட்டுமல்லாது கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பம், மல்யுத்தம், நாடகம், நாட்டியநாடகம் என்று பலதுறைகளில் சாதனை படைத்துவந்த அலெக்சுக்கு செவாலியே விருதும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆண்டு மே மாதம் 1 தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

அவர் மனைவி திரவியமேரி என்ற, பிரின்சி, டீனா என இரு மகள்கள்களும் உள்ளனர்.

 6 ஆண்டு மலர் அஞ்சலி வரும் இந்த நேரத்தில் நினைவு கூறுகிறது நம்ம திருச்சி வார இதழ் 

Leave A Reply

Your email address will not be published.