தமிழகத்தில் இனி சித்தர் ஆட்சி தான் !முடிவுக்கு வந்தது தனி மனித ஆட்சி

0 42

தமிழகத்தில் இனி சித்தர் ஆட்சி தான் !

ஜெயலலிதாவுடன் முடிவுக்கு வந்தது தனி மனித ஆட்சி

தமிழகத்தில் கடந்தசில மாதங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பங்கள், அரசியல் மாற்றங்கள் அனைத்திற்க்கும்முற்றுப்புள்ளி வைக்கும் நாள் மிக விரைவில் உள்ளது. அதிலும் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி வானத்தில் முருகபெருமான் வட்ட வடிவில் காட்சியளிப்பார். அவரை புண்ணியம் செய்பவர்கள் மட்டுமே காண முடியும் என்றபரப்புரையோடு துறையூரிலிருந்து தமிழகம் முழுவதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது முடிவுக்கு வந்தது தனி மனித ஆட்சி.

அந்த குடிலின் உயர் பொறுப்பில் உள்ள செந்தில்  நம்ம திருச்சி இதழுக்க பேசிய போது…

29.07.2017 நம்ம திருச்சி இதழில் முதல் பக்க கட்டுரையாக வெளியானது

அன்னதானம் என்பது தான் எங்களுடைய முக்கிய சேவை ஒரே நேரத்தில் இங்கு 2ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறி பசி ஆற்றும் அளவிற்க்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து சுமார் 45 கிலோமீ தூரத்தில் உள்ள துறையூரில் அகத்திய சன்மார்க்க சங்க அறக்கட்டளையால் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள குடிலில் முருக பெருமானின் அவதாரமான ஆறுமுக அரங்க மகா தேசிகசுவாமிகள் ஓங்காரகுடிலில் வசித்து வருகிறார்.

கடந்த 30 வருடங்களுக்கு முன்பு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அறக்கட்டளை முதலில் 5 பேருக்கு தினமும்3 வேலையும் உணவளித்து வந்ததோம், முருக பெருமானின் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளை கொண்டுஎண்ணிக்கையை அதிகப்படுத்தினோம்.

இன்று அசுர அளவில் வளர்ச்சி அடைந்து ஒரு நாளைக்கு குடிலில் மட்டும் சுமார் 2ஆயிரத்திற்க்கும்அதிகமானவர்களுக்கு உணவளிக்கப்பட்டு வருகிறது. அது நேரம் எங்கள் அமைப்பாளர்கள் மூலம் தமிழகம்முழுவதும் கோடி கணக்கான மக்களுக்கு தினம் தினம் உணவளிக்கப்பட்டு வருகிறது.

தினமும் பசியாறும் பொது மக்கள்

தமிழகம் முழுவதும் மாவட்டதோறும் பல இடங்களில் காலை கஞ்சி, பொங்கல், உள்ளிட்ட உணவுகள் இலவசமாகவழங்குகிறோம். குறிப்பாக சாலை ஓரங்களில் வாழுபவர்கள், இயலாதவர்கள், முதியவர்கள் என்று அனைவருக்கும்நாங்கள் உணவளித்து வருகிறோம். மேலும் தமிழகம் முழுவதும் கிராமபுறங்களில் வாகனங்கள் மூலம் உணவுவழங்கி வருகிறோம். உணவு வழங்குவதன் நோக்கம் ”பசி என்பது ஒவ்வொரு படைப்பிற்க்கும் அத்தியாவசியமானஒன்று அந்த பசியை ஆற்ற விரும்பாத மனிதர்கள் பாவத்தை சம்பாதிப்பார்கள்” என்று பல இந்துமத நுல்கள்குறிப்பிட்டுள்ளன.

கடவுளின் படைப்புகள் அனைத்திற்க்கும் 3 வேளையும் உணவு கிடைத்தாலே இந்த பூமியில் மழை பெய்யும். அதிலும் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்கள், அசம்பாவிதங்கள், உள்ளிட்ட அனைத்தும் குறிப்பாக ஜெயலலிதா என்ற தனி மனித ஆட்சியோடு முடிவுக்கு வந்துவிட்டது.

பிரமாணடமான உணவு சாப்பிடும் இடம்

வருகின்ற மே மாதம் 1 ஆம் தேதி முருகபெருமான் வானத்தில் வட்ட வடிவில் அருள் பாலிக்க உள்ளார். அவரைஎல்லாராலும் பார்க்க முடியாது புலால் உண்ணாதவா்களும், இயலாதவர்களுக்கு உணவளிக்காதவர்கள், கடவுளின்பிறப்புகளை மதிக்காதவர்கள் காண முடியாது.

அன்றைய நாளில் இருந்து தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். இனி தனிமனித ஆட்சி நடைபெறாது.

சித்தர்கள் ஆட்சி இனி தமிழகத்தில் துவங்க ஆரம்பித்துள்ளது. சித்தர்கள் ஆலோசனையின்படி தான் தமிழகத்தில்ஆட்சி நடைபெறும் என்று புதிய தகவல்களை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.