100 சவரன் தங்கம் கொடுத்து மகிழ்ச்சி கண்ணீல் மூழ்க வைத்த நடிகர் விஜய்சேதுபதி !

0 37

100 சவரன் தங்கம் கொடுத்து மகிழ்ச்சி கண்ணீல் மூழ்க வைத்த நடிகர் விஜய்சேதுபதி

100 சவரன் தங்கம் வழங்கியது தமிழ் சினிமாவுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் ‘- மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

 

தமிழ்த்தேசிய சலனப்பட 100ஆம் ஆண்டு விழா, இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் நிறுவனராக இருக்கும் ‘உலகாயுதா’ அமைப்பின் சார்பில் கொண்டாடப்பட்டது. திரையுலகு சார்ந்த 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அதற்கான பொருள் உதவியை ‘மக்கள் செல்வன்’ விஜய சேதுபதி அளித்திருந்தார்.

தமிழ் திரையுலகின் 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் என மொத்தம் நூறு சவரன் தங்க பதக்கங்களின் செலவை முழுவதுமாக ஏற்று வழங்கி இருப்பவர் விஜய் சேதபதி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இயக்குனர் எஸ்.பி. ஜெனநாதன் கடலும் கடல் சார்ந்த இடமும்- இயற்கை, நகரும் நகர் சார்ந்த இடமும் -ஈ, காடும் காடு சார்ந்த இடமும்- பேராண்மை,சிறையும் சிறை சார்ந்த இடமும்- புறம்போக்கு ஆகிய சமூக நோக்கமுள்ள படங்களை இயக்கியுள்ளார். 2003ல் இயக்கிய இயற்கை படம் தேசிய விருதை பெற்றுத் தந்தது. இவரின் எண்ணமும் எழுத்தும், இயக்கமும் எளிமையாக, சமூக அக்கறை, சிந்தனைகள் கொண்டதாக சிறப்பாக இருக்கும்.

காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற உலகாயுதா விழாவில் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன், ‘மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி இருவரும் சேர்ந்து மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் ‘கலைப்பூங்கா” டி.என்.இராவணன், ‘பராசக்தி” மாலி, ‘தேவி” மணி மற்றும் நெல்லை பாரதி ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தார்.

இயக்குனர் எஸ்.பி.ஜெனநாதன் இயற்கை மற்றும் விஜய் சேதுபதி தென் மேற்கு பருவக்காற்று என்று தேசிய விருது வாங்கிய படங்களில் பணியாற்றியவர்கள்.இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு புதிய முயற்சியை எடுத்திருந்தார்கள்.

பல திறமையான பல திரையுலக பின்னணி கலைஞர்கள் இன்று திரையுலகில் இருந்தே வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதற்கு முக்கியமான காரணம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம். தமிழ் திரையுலகின் அப்படிப்பட்ட மூத்த திரையுலக பிண்ணனி கலைஞர்களை கௌரவ படுத்த, பிரம்மாண்ட விழாவை ‘உலகாயுதா” நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்து இருந்தார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.

 

இந்த தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்வு உழைப்பாளர்கள் தினமான நேற்று நடந்தது. இந்நிகழ்வில், இயக்குனர் சேரன், அமீர், கரு.பழனியப்பன், விஜய் சேதுபதி மற்றும் நிறைய திரைப்பட தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். விழாவில், சினிமாவில் தொழிற்சங்க முன்னோடிகளான நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாசன் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு, விஜய் சேதுபதியை நடிகராக சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிக்கு முதல் பதக்கம் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சங்கம் சார்ந்து இயங்கக்கூடிய கலைஞர்கள் மற்றும் சங்கம் சாராமல் இயங்கும் கலைஞர்கள் ஆகியோருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மூத்த திரைப்பட ஆபரேட்டர் ராமலிங்கத்திற்கு, ஆபரேட்டராக பணியாற்றிய சேரனின் அப்பா பதக்கம் அணிவித்தார். விநியோகஸ்தர்கள், ஆபரேட்டர்கள், டிரைவர்கள், நடன இயக்குனர்கள், என சினிமாவின் அனைத்து துறைகளை சார்ந்தவர்களுக்கும் பதக்கம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் ‘கலைப்பூங்கா’ டி.என்.இராவணன், ‘பராசக்தி” மாலி, ‘தேவி” மணி மற்றும் நெல்லை பாரதி ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தார்கள்.

அப்போது பேசிய நெல்லை பாரதி, “ஏற்பது இகழ்ச்சி என்பர், ஆனால் ஏற்பது மகிழ்ச்சி என உணர்கிறேன்” என்றார்.

பின்னர் பேசிய விஜய் சேதுபதி, ‘எல்லோருக்கும் நான் நூறு சவரன் கொடுத்தேன் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்க்ள். ஏன் கொடுத்தேன்? தெரியுமா? இங்க இருந்து தான் நான் எடுத்தேன்… அதனாலத்தான் கொடுத்தேன். இன்றைக்கு எனக்கு கிடைக்கிற மரியாதை எல்லாம் நடிகர் விஜய் சேதுபதிக்கு கிடைக்கிற மரியாதைதான். என்னை ஒரு நடிகனாக அங்கீகரித்திருக்கிற இந்த சினிமாவுக்கு நான் செய்கிற நன்றிக்கடனாக மட்டுமே இதை பார்க்கிறேன்” என்றார்.

காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற உலகாயுதா விழாவில் டைரக்டர் ஜனநாதன், நடிகர் விஜய்சேதுபதி, பி.ஆர்.ஓ. சுரேஷ்சந்திரா மூவருக்கும் பி.ஆர்.ஓ. யூனியன் தலைவர் டைமண்ட்டாபு, செயலாளர் ஜான், பொருளாளர் விஜயமுரளி, முன்னாள் தலைவர் நெல்லைசுந்தரராஜன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்

கடைசியில், ‘எல்லோருக்கும் தங்கம் கொடுத்து அழகு பார்த்த என் அண்ணன், நண்பர் எஸ்.பி.ஜனநாதனுக்கு நான் தங்கம் கொடுக்க ஆசைப்படுகிறேன்” என்று சொல்லி அவருக்கும் பதக்கம் வழங்கி, நிகழ்ச்சியை நிறைவாக்கினார் விஜய் சேதுபதி.

மக்கள் தொடர்பாளர்கள் சுரேஷ்சந்திரா மற்றும் நாசர் விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.