டியூசனுக்கு வரும் மாணவிகளை ஆபாசம் படம் எடுத்து வெளியிடும் டீச்சர் !

0 44

டியூசனுக்கு வரும் மாணவிகளை ஆபாசம் படம் எடுத்து வெளியிடும் ஆசிரியர்

 

டியூசன் சென்டர் நடத்தி மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்து முகநூலில் வெளியிட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

 

இன்றைய கால கட்டத்தில் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு டியூசன் படிப்பதை அவசியமான ஒன்றாக மாற்றயிருக்கிறது. இந்த  போட்டியான உலகம். பள்ளிகளை போல் இல்லாம் டியூசன் நடத்துபவர்கள் தனிப்பட்ட அதிகாரத்துடன் இருப்பதால் அப்பாவி மாணவிகள் இந்த மாதிரியான வக்கிர வாத்தியார்களிடம் சிக்கி தவிக்கிறார்கள். என்பதை விவரிக்கும் செய்தி இது.

கேரள மாணவிகளின் ஆபாச படங்கள் அடிக்கடி முகநூலில் வெளியாகி வருவதாக திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து போலீசார் ரகசிய விசாரணையை தொடங்கினர். அந்த விசாரணையில் மாணவிகளின் ஆபாச படங்கள் வெளியாவதாக கூறப்பட்ட முகநூல் முகவரி ஆஷிக் என்ற பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது போலியான முகவரி என்பது தெரியவந்தது.

அந்த முகவரியின் பின்னணியில் இருப்பவர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் அவர், திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியில் டியூசன் சென்டர் நடத்தி வரும் ஆசிரியரான அருண்குமார் (வயது 36) என்பது தெரியவந்தது.

டியூசன் சென்டரில் சோதனை

இதையடுத்து போலீசார் அந்த டியூசன் சென்டருக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அருண்குமாரின் அறையில் இருந்து 6 செல்போன்களும், ஒரு மடிக்கணினியும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் இருந்த வீடியோ பதிவுகளை ஆராய்ந்தபோது, டியூசன் சென்டரில் படித்து வந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அருண்குமாரிடம் நடத்தி விசாரணையில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தியும், அவர்கள் அமர்ந்து படிக்கும் மேஜைகளின் கீழே சிறிய அளவிலான கேமராக்களை வைத்தும் ஆபாசமாக படம் பிடித்து போலி முகநூல் முகவரியில் அவற்றை வெளியிட்டது தெரியவந்தது.

ஆசிரியர் கைது

மேலும் செல்போன் மூலம் ‘வாட்ஸ் அப்‘ குரூப்களிலும் அவற்றை பரவ விட்டுள்ளார். இதையடுத்து போலீசார் ஆசிரியரான அருண்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் ஆபாச படங்களை காட்டி, மிரட்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டியூசனுக்கு வரும் மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்து அவற்றை முகநூலில் வெளியிடப்பட்ட சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது கேரளாவில் மட்டும் அல்ல உலகில் அனைத்து பகுதியிலும் இதே நிலை தான் இருக்கிறது.

 

நம்ம திருச்சி இதழ் இ.பேப்பர் லிங்க் http://angusam.com/2017/05/04/nammatrichy-april-2nd-issue/

Leave A Reply

Your email address will not be published.