அடேங்கப்பா! ​பாகுபலி -2 வசூலில் சாதனை ரூ.1000 கோடியை தாண்டியிருக்கு

0 40

பாகுபலி -2 வசூலில் சாதனை ரூ.1000 கோடியை தாண்டியது.


சமீபத்தில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி-2’ ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

 இந்தப்படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கின்றன.இதனால், இந்த படத்தின் வசூலும் இந்திய சினிமாவில் யாரும்  சாதனை புரிந்துவருகிறது. 
பாகுபாலி-2 வெளியான 6 நாட்களிலேயே ரூ.800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவிலேயே அதிகமான வசூலை பெற்ற படம் என்கிற சாதனையை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படம் விரைவில் ரூ.1000 கோடியை எட்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டநிலையில், இன்று அந்த சாதனையையும் தற்போது பாகுபலி-2 நிகழ்த்தியுள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி இதுகுறித்து, 

தற்போது 9 நாட்களில் இந்த படம் ரூ.1000 கோடியை எட்டியுள்ளதாக மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார்.
 இந்திய சினிமாவிலேயே ரூ.1000 கோடியை எட்டிய முதல் படம் பாகுபலி-2 தான் எனகி்ற பெருமையை பெற்றுள்ளது. 
#1000CCBaahubali2

Leave A Reply

Your email address will not be published.