தமிழக அரசு பள்ளிகளில் 1114 பட்டதாரி ஆசிரியர் பணிகள் ! கடைசி தேதி 10-5-2017

0 34

தமிழக அரசு பள்ளிகளில் 1114 பட்டதாரி ஆசிரியர் பணிகள் கடைசி தேதி 10-5-2017

 

தமிழக அரசு பள்ளிகளில் 1114 பட்டதாரி ஆசியரியர் பணிகள் நிரப்பப்படுகிறது.

 

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

 

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு தமிழக அரசு பள்ளிகளில் ஏற் படும் ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. தற்போது பி.டி. அசிஸ்டண்ட் பணிக்கு 912 இடங்கள் மற்றும் பி.டி. அசிஸ்டண்ட் (ஐ.இ.டி.எஸ்.எஸ்.) பணிக்கு 202 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 1,114 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்…

 

வயது வரம்பு:

 

விண்ணப்பதாரர்கள் 1-7-2017-ந் தேதியில் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி:

 

 

பி.ஏ., பி.லிட் பட்டப்படிப்புடன், பி.டி./பி.எட் படித்தவர்கள், டி.டி.எட்.- டி.பி.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன் இன்னும் பிற பாடங்களில் பி.எட். படித்தவர்களுக்கும் வாய்ப்புள்ளது. எந்தெந்த பிரிவை தேர்வு செய்து படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பதை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

 

தேர்வு செய்யும் முறை:

 

2012, 2013, 2014-ம் ஆண்டுக்குரிய ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இருப்பவர்கள், சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை, தேவையான சான்றுகளுடன் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் Teacher Recruitment Board (TRB), 4th Floor, EVK Sampath Maaligai, DPI Compound, College Road, Chennai 600 006 என்ற முகவரிக்கு 10-5-2017-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்

Leave A Reply

Your email address will not be published.