திருச்சியின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி ! எல்.அடைக்கலராஜ்.

0 80

திருச்சியில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி ! எல்.அடைக்கலராஜ்.

சிவாஜி, சோ, ரஜினிகாந்த், மூப்பனார் உள்ளிட்டோருக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த எல். அடைக்கலராஜ் Ex .MP- அறிவோம் அரசியல்

அடைக்கலராஜ் தமிழக அரசியலிலும் – திருச்சி அரசியலும் தவிர்க்க முடியாத நபர். இன்று 09.05.2017 அவருடைய 81வது பிறந்தநாள்  இன்று அங்குசம் மற்றும் நம்மதிருச்சி வாசகர்களுக்கு அவரை பற்றி சிறு குறிப்பு

1996ம் வருடம் தமிழக அரசியில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியவர் மூப்பனார்.

மிகப்பெரிய தேசிய கட்சியான காங்கிரஸில் இருந்து பிரிந்து தனியாக தமிழ் மாநில காங்கிரஸ் ( த.மா.க )  என்கிற கட்சியை மூப்பனார் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவோடும் நடிகர் சோ. ராமசாமியின் துணையோடு ஆரம்பிக்க நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட நான்கு பேரில் ஓருவர் திருச்சி அடைக்கலராஜ்.

அந்த நால்வர் கூட்டத்தின் முடிவில் முதன்முதலில் கட்சியின் நிதியாக 50இலட்சத்தை கொடுத்தவர் இவர்.

இப்படி தமிழக அரசியலிலும் திருச்சி அரசியலிலும் 25வருடத்திற்கு மேல் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்த அடைக்கலராஜ் கடைசி 10வருடங்கள் எந்தவித அரசியலிலும் ஈடுபடமால் அமைதியாக ரியல் எஸ்டேரில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் திடீர் என்று அவருக்கு கண்கள் எல்லாம் இருண்டும் உடம்பு  முழுக்க வியத்தும் கொட்ட ஆரம்பிக்க நரம்பு இழுக்க ஆரம்பித்தது என்று அவர் சொல்ல, உடனே வீட்டில் இருந்தவர்கள் அவர்களுடைய குடும்ப டாக்டரான கணபதி அவர்களிடம் அழைத்து சென்றார்கள்.

அவரை பரிசோதனை செய்து விட்டு டாக்டர் கணபதி, இது நரம்பியல் சம்மந்த பிரச்சனை போன்று இருக்கிறது என்று சொல்ல, அடுத்த நிமிடம். அடைக்கலராஜ் திருச்சி கே.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கே பரிசோதனை செய்ய அப்போது தான் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

அதன் பிறகு அவரை காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு கொண்டிருக்க இதயம் 25சதவீதம் கூட தயார் நிலையில் இல்லாமல் அறுவைசிகிச்சை பலன் அளிக்காமல் தன்னுடைய 79வது வயதில் 27.9.2015 அன்று இறந்து போனார்.

அடைக்கலராஜின் அப்பா லூர்துசாமிபிள்ளை திருச்சி நகராட்சியின் தந்தையாகவும், அவருடைய அப்பா ஞானாதிக்கம்பிள்ளை திருச்சியில் மிகப்பெரிய இரயில்வே ஒப்பந்தகாரர் என்பதால் இவருடைய குடும்பம் மிகப்பெரிய செல்வசெழிப்பாக இருந்தார்கள். இந்த செல்வாக்கு நடிகர் சிவாஜி கணேசனோடு நெருங்கிய நட்பு ஏற்பட்டு அவருடன் பங்குதாராக ரியல்எஸ்டே வியாபாரம் திருச்சியில் அலுவலகம் தொடங்கி ஆரம்பிக்கும் அளவுக்கு கொண்டு சென்றது ஒரு கட்டத்தில் காங்கிரஸ் சிவாஜியோடு நட்பு என்கிற அடிப்படையிலே காங்கிரஸ் கட்சியின் சார்பாக 1984ல் எம்.பி சீட் கிடைத்து வெற்றிபெற்று தன்னுடைய அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து அதன் பிறகு சினிமா விநியோகம், அடுத்து ஜீபிட்டர் பிலீம்ஸ்  என்கிற புதிய சினிமா வியாபாரம்,  அதன் பிறகு ரஜினி படங்கள் என்றாலே திருச்சி பகுதி முழுவதும் இவர்தான் என்கிற அளவில் வளர்ந்தார்.

தொடர்ந்து திருச்சியில் 4முறை எம்.பியாக இருந்த பெருமைக்கு சொந்தகாரர். இவர் பெரிய அளவில் திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்தாலும் கை சுத்தமானவர் என்கிற பெயருக்கு சொந்தகாரர்.

இவர் காலத்திலும் காங்கிரஸ் கட்சியில் எவ்வளவோ கோஷ்டிகள் இருந்தாலும் திருச்சியில் அடைக்கலராஜ் என்கிற ஓரே கோஷ்டி தான் இருந்தது. ஆனால் த.மா.க கட்சி ஆரம்பித்து அதில் திருச்சிக்கு ஓரு சீட்டு அதுவும் ஸ்ரீரங்கம் தொகுதியில் மூப்பனார் உறவினர் ஆனந்தராஜுக்கு சீட்டு என்று மூப்பனாரின் எண்ணத்திற்கு நேர்மாறாக அடைக்கலராஜ் திருச்சியில் சீட் வேண்டாம் என்று பாளை.அமரமூர்த்திக்கு அரியலூருக்கு கொடுங்கள் என்று சொல்லி திருச்சிக்கு வேண்டாம் என்று சொல்ல மூப்பனாருக்கும் இவருக்கும் இடையே ஏற்ப்பட்ட பிளவு காரணமாக சட்டென்று காங்கிரஸில் தனக்கு யாரும் தலைவர் கிடையாது தனோ தலைவர் என்று சொல்லி கொண்டு வந்தார்.

ஆனாலும் திருச்சி அரசியல் யாருக்கும் 20வருடங்களுக்கு மேல் கிடையாது என்ற சென்டிமெண்ல்  இவருடைய அரசியல் வாழ்வு கொஞ்சம் கொஞ்மாக சரிய ஆரம்பித்தது. அதன் பிறகு மீண்டும் காங்கிரஸ் சார்பில் இரண்டு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்ததும் அரசியலில் இருந்து இவர் அமைதியானார்.

இவருடைய மூன்று மகன்களான லூயஸ், பிரான்சிஸ், வின்சென் இப்போது வியாபரத்தை நடத்திக்கொண்டு வந்தாலும் யாருக்கும் அரசியலில் தொடராமல் இருப்பது பெரிய பின்னடைவு தான்.

அடைக்கலராஜின் ஆரம்ப கட்டத்தில் அவர் எம்.பி. தேர்தலில் ஒவ்வொரு முறை போட்டியிடும் போது திருச்சியை 3 பகுதிகளாக  பிரித்து தன்னுடைய மூன்று மகன்களை பிரித்து கொடுத்து களப்பணி ஆற்றுவார். அப்படிப்பட்ட பணியில் அவருடைய மகன்களின் வின்செட் ஸ்ரீரங்கம் தொகுதியை தொடர்ந்து பணியாற்றியதன் விளைவு இப்போது வரை ஸ்ரீரங்கம் தொகுதியில் அந்தநல்லூர் வட்டாரம் மணிகண்டபகுதியில் இன்று வரை செல்வாக்கு இருக்கிறது.

1989 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் நடந்த 3 மக்களவைத்  தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர் அடைக்கலராஜ்.

அடைக்கவராஜ் மகன் லூயிஸ் ஆரம்பத்தில் இருந்து அரசியலுக்கு வரும் படி அவருடைய ஆதரவாளர்கள் கேட்ட போது.. இல்லங்க.. எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை கட்சிக்கு ஏதாவது வேணுமானா சொல்லுங்க தரேன் என்று பெருந்தன்மையுடன் சொன்னவர். அடுத்து தங்ளை தக்க வைத்துக்கொள்ள அரசியலுக்கு அடியெடுத்து வைத்துள்ளார்.

அவருடைய இன்னோரு மகன் பிரான்சிஸ் திருச்சியில் வெகுகாலமாக பூட்டியே கடந்த மாரீஸ் 70எம்.எம். தியேட்டரை தன்னுடைய அப்பாவின் நினைவாக எல்.அடைக்கலராஜ் என்பதன் சுருக்கம் எல்.ஏ. (LA) என்று பெயரை மாற்றி புதிய திரையரங்கை உருவாக்கி அப்பாவின் ஆரம்ப கால தொழிலை அவருடைய நினைவுபடுத்தும் வகையில் மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார். இத்தோடு சோனா, மீனா, ஆகிய தியேட்டர்களையும் லீசு எடுத்திருக்கிறார்.

திருச்சியின் அடையாளமாக விளங்கிய அடைக்கலராஜ்க்கு இன்று 81வது பிறந்தநாள்

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலபொதுக்குழு உறுப்பினர் ஏ.ஜோசப் லூயிஸ்,

மாநில காங்கிரஸ் துணை தலைவரும், திருச்சி முன்னாள் எம்பியும், எங்கள் தந்தையுமான எல்.அடைக்கலராஜின் 81வது பிறந்தநாள் விழாவில் திருச்சி ஜென்னி பிளாசாவில் அமைந்திருக்கும் அவரது உருவசிலைக்கு ( சிதம்பரம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ) காலை 9.30 மணியளவில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து பிரிவு தலைவர்களும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில்  கூறியுள்ளார்.

– வெற்றிசெல்வன்.

Leave A Reply

Your email address will not be published.