சொன்ன தேதிக்கு முன்னே வரும் அஜித்தின் விவேகம் படத்தின் டீசர் . 11 05.2017 தேதி !

0 27

சொன்ன தேதிக்கு முன்னே வரும் அஜித்தின் விவேகம் படத்தின் டீசர் .  11 05.2017  தேதி

 

அஜித்தின் விவேகம் டீசர் 18 ந்தேதிக்கு முன்னதாக மே 11 ல் வெளியிட திட்டமிடபட்டு உள்ளது

 

அஜித்குமார் நடித்த ‘வேதாளம்’ படம் கடந்த 2015-ம் வருடம் நவம்பர் மாதம் திரைக்கு வந்து பரபரப்பாக ஓடியது. ரூ.61 கோடி செலவில் தயாரான அந்த படம் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. சிவா இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே அஜித்குமாரை வைத்து இயக்கிய ‘வீரம்’ படமும் நல்ல லாபம் பார்த்தது. இதனால், இவர்கள் கூட்டணியில் 3-வது படமும் தற்போது தயாராகி வருகிறது.சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் படம் உருவாகிறது.

இது அஜித்குமாருக்கு 57-வது படம் ஆகும். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல்ஹாசன் மகள் அக்‌ஷராஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு பல்கேரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடந்தது. ஐதராபாத்திலும் முக்கிய காட்சிகளை படமாக்கினர்.

 

‘விவேகம்’ படத்துக்கு இசையமைத்து வரும் அனிருத், “தமிழில் இது ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம்” என்று கூறி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மே மாதம் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அஜித் நடித்துவரும், ‘விவேகம்’ படத்துக்கான எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. வில்லனாக விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன், பிரமாண்டமான பொருள் செலவு என, படத்தின் ஒவ்வொரு விஷயமும் முந்தைய அஜித் படங்களை மிஞ்சியதாக உள்ளது.

 

முதலில் சிக்ஸ் பேக், அடுத்து பனிப்பிரதேசத்தில் துப்பாக்கியுடன் என, படத்தின் கலக்கலான ஸ்டில்கள் வெளியாகி, ரசிகர்களுக்கு விருந்து படைத்தன. படத்தின் டீசர், அஜித்தின் பிறந்தநாளான மே முதல் தேதியில் வெளியாகலாம் என்ற தகவலும் பரவி உள்ளது.

 

 

அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘விவேகம்’. இப்படத்தின் முதல் பார்வையும், படத்தின் தலைப்பும் பிப்ரவரி 2ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த முதல் பார்வையில் அஜித்தின் கட்டுமஸ்தான தோற்றமும், போஸ்டரின் டிசைனும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அஜித் ரசிகர்கள், அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதியன்று படத்தின் டீசர் வெளியாகும் என்று மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அன்றைய தினம் டீசர் வெளியிடப்படவில்லை. பல்கேரியாவில் தொடர் படப்பிடிப்பு நடைபெறுவதால்தான் டீசர் அப்போது வெளியிடப்படவில்லை என தகவல்கள் தெரிவித்தன. விரைவில் பல்கேரியாவில் படப்பிடிப்பு முடிந்து குழுவினர் இந்தியா திரும்ப உள்ளனர்.

 

முதல் பார்வையை வெளியிட்ட பிறகு கடந்த சில மாதங்களாக அடிக்கடி அஜித்தின் சில புகைப்படங்களை வெளியிட்டு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தார் இயக்குனர் சிவா. நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள டீசர் வெளியீட்டு அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மே 18ம் தேதி வியாழக்கிழமை, வழக்கம் போல 12.01 மணிக்கு ‘விவேகம்’ படத்தின் டீசர் வெளியாக உள்ளது. என தெரிவிக்கபட்டு இருந்தது.

 
SAI SAI #VIVEGAM teaser release 18th may 2017

— siva+director (@directorsiva) May 4, 2017

இந்நிலையில் இன்று (மே 05) விவேகம் படத்தின் டீசரை முன்கூட்டிய வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு அறிவித்து மே 18 ம் தேதிக்கு பதிலாக மே 11 ம் தேதி டீசர் வெளியிட பட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Sai sai with the blessings of the almighty teaser #vivegam is ready ,preponing the teaser release date to 11th may Thursday🙏🙏

— siva+director (@directorsiva) May 5, 2017

 

 

Leave A Reply

Your email address will not be published.